கட்சி தாவல் தடை சட்டம், 1985


கட்சி தாவல் தடை சட்டம், 1985, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், 52வது திருத்தத்தின் படி, பத்தாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.[1] [2]

கட்சித் தாவல் தடை சட்டத்தின் முக்கிய பிரிவுகள்

தொகு
  • இந்திய அரசியல் சட்டத்தின் 10 வது அட்டவணையில் உள்ள கட்சித் தாவல் தடை சட்டம் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, 1985ல் 52வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.
  • கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர், தானாக முன்வந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து விலகினால், அவர் தனது உறுப்பினர் பதவியை இழப்பார்.
  • நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் சார்ந்திருக்கும் கட்சியின் கொறடா பிறப்பிக்கும் உத்தரவுக்கு மாறாக நாடாளுமன்ற/சட்டமன்ற வாக்கெடுப்பில் வாக்களித்தாலோ, அல்லது வாக்கெடுப்பைப் புறக்கணித்தாலோ பதவி இழப்பார். [3]
  • ஒரு உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், கட்சி தாவல் தடுப்பு சட்டப்படி அவர் தேர்தலில் நிறுத்திய அரசியல் கட்சியைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார்" என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் விளைவாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ கட்சிக் கொறடாவின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். கட்சிக் கொறடா கட்டளையை மீறினால் பதவி பறிபோகும். இவ்வாறு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் வேறு கட்சியில் சேர்ந்தாலும் பதவி பறிபோகும்.[4] [5]

விதி விலக்குகள்

தொகு

கட்சி தாவல் தடைச் சட்ட திருத்த மசோதா 2013

தொகு

கட்சி தாவல் தடைச் சட்ட திருத்த மசோதா 2013ன் படி, ஒரு அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சிக்கு மாறினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டுவிடும். [6]

அமைச்சர்களின் எண்ணிக்கை

தொகு

கட்சி தாவல் தடைச் சட்டம் திருத்த வரைவு நகலின் படி, மொத்தம் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களில் 10 சதவிகிதம் பேருக்கே அமைச்சர் பதவி வழங்க முடியும் என சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கோவா, மேகாலாயா, மணிப்பூர், நாகாலாந்து போன்ற சிறிய மாநிலங்களுக்கும் மட்டும் இச்சட்ட திருத்தத்தில் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்சித் தடை தாவல் சட்டம் தொடர்பாக குழுக்களின் பரிந்துரைகள்

தொகு
  • அரசியல் சட்டம் 10-வது அட்டவணையில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் பதவி பறிப்பு சம்பந்தமாக அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்குகளை நீக்க வேண்டும் என தேர்தல் சீர்திருத்தம் குறித்தான தினேஷ் கோஸ்வாமி குழு, இந்திய சட்ட ஆணையம், அரசியல் சட்ட மறுஆய்வு பணிக்குழு ஆகிய அமைப்புகள் இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
  • கட்சி மாறும் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினரின் பதவியை பறிப்பதோடு வேறு பொதுநல பதவியில் இருந்தாலும் பறித்துவிட வேண்டும் என்றும் அரசியில் சட்ட மறுஆய்வு தேசிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பதவி பறிப்பானது அடுத்த தேர்தல் முடியும் வரையோ அல்லது பதவிக்காலம் முடியும் வரையோ அல்லது இதில் எது முன்கூட்டி வருகிறதோ அதுவரை இருக்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Anti-Defection Law பக்கம்:1
  2. Anti-Defection Law பக்கம் 2
  3. என்ன சொல்கிறது கட்சி தாவல் தடை சட்டம் ?
  4. அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா அவர்களின் நீக்கம் மீண்டுமொரு "கட்சி தாவல் சட்ட" சிக்கலை தோற்றுவித்துள்ளது[தொடர்பிழந்த இணைப்பு]
  5. கட்சித்தாவல் சட்டம்: அமர் சிங், ஜெயப்பிரதா வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  6. What the Anti-Defection Law says

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்சி_தாவல்_தடை_சட்டம்,_1985&oldid=4059775" இலிருந்து மீள்விக்கப்பட்டது