கட்ச் லாகுனா
கட்ச் லாகுனா (Kutch Lacuna) என்பது டைட்டனில் காணப்படும் பெரிய இடைவிட்டுத் தோன்றும் ஒரு ஏரியாகும் [1]. 88,4 ° வ ,மற்றும் 217 ° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் [2] டைட்டனின் மேற்பரப்பில் 175 கிலோமீட்டர் நீளமாக இந்த ஏரி அமைந்துள்ளது. திரவ ஈத்தேனும் மீத்தேனும் சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியுள்ளன [3]. கேசினி-இயுகென் புறவெளி தேட்டக்கலம் டைட்டனில் கட்ச் லாகுனாவைக் கண்டறிந்தது. இடைவிட்டுத் தோன்றும் ஏரிக்கான அறிகுறிகள் தெரிந்ததால், இந்திய-பாக்கித்தான் எல்லையில் கிரேட் இரான் ஆஃப் கட்ச், சதுப்புநிலம் [4] கண்டறியப்பட்ட பின்னர் 2013 ஆம் ஆண்டு இந்த ஏரிக்கு கட்ச் லாகுனா என்று பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kutch Lacuna at USGS.gov.
- ↑ Planetary names
- ↑ Athéna Coustenis, F. W. Taylor Titan: Exploring an Earthlike World. (World Scientific, 2008) pp. 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-270-501-3.
- ↑ "Five New Names Approved for Use on Titan". Archived from the original on 2014-01-12. பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.