கட்டட அடித்தளம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கட்டட அடித்தளம் என்பது கட்டடத்தைப் பூமியில் தாங்க்கூடிய கட்டிடத்தில் மிக முக்கியமான பகுதி இது பூமியில் புதைந்த நிலையில் பெரும் பகுதியும், பூமிக்கு வெளியில் சிறுபக்தியும் பெரும்பாலும் அமைந்திருக்கும். நமக்கு கால்களின் பலம் எவ்வளவு முக்கியமானதோ அதுபோல் கட்டிடத்தின் அடித்தளம் ஆகும். பெரிய கட்டடங்களுக்கு அடித்தளம் திறமைமிக்க பொறியாளர்களைக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.
நிலப் பரிசோதனை
தொகுநிலப் பரிசோதனை என்பது வீடுகட்டக்கூடிய நிலம் கட்டுமானத்திற்கு உகந்ததா எனச் சோதனை செய்வது ஆகும். இதுவே முதல் கட்டப்பணி ஆகும்.
வகைகள்
தொகுகுறுமணல் வகை கடற்கரையை ஒட்டியபகுதிகளில் காணப்படும் வகையாகும். இவ்வகை நிலங்களில் உறுதியான இறுகிய அமைப்பு நிலத்திற்கு 5அடி முதல்10அடி வரை தோண்ட வேண்டியிருக்கும் பூமிக்கு மேல்கட்டிடத்தின் உயரம் மற்றும் எத்தனை அடுக்குகள் கட்டவிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து பூமிக்குக் கீழ் செல்லும் ஆழம் புட்டிங் எனச் சொல்லப்படுவதின் அகலம் 'உயரம் தீர்மானிக்கப்படும் இந்தப் பணியைக் கட்டிடப் பொறியாளரும் கம்பி வடிவமைப்பு பொறியாளரும் இணைந்து முடிவு செய்வர்
கருப்புக் களிமண், சிவப்புக் களிமண் ஆகிய நிலங்கள் தண்ணீரைத் தேக்கிவைக்கும் குணம் கொண்டவை, மேலும் தண்ணீர் இவ்வகை நிலத்தை உறுதி இழக்கச் செய்துவிடும் ஆகவே இந்த வகை நிலங்களில் கட்டிடங்கள் கட்டுவது மிகப்பெரிய சவாலான பணியாகும். இந்த உறுதியற்ற அடுக்குகள் 10அடி ஆழம்முதல் 30அடிவரையும் அதற்குமேலும் செல்லும் வாய்ப்புகள் உள்ளது இதனால் எனவே எத்தனை அடி ஆழம்வரை"களி" இருக்கிறதோ அதுவரை தோண்டி நீக்குவது அவசியம்.