கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம்

சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (ஆங்கிலம்: CSIR-Structural Engineering Research Centre CSIR-SERC ), சென்னை, இந்தியாவில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுக் கழகத்தின் 39 ஆய்வகங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம்,ISO:9001 தர சான்றளிக்கப்பட்ட நிறுவனம் ஆகும். [1]

உரிமை ஆவணம் தொகு

சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி (ஆங்கிலம்: CSIR-SERC) ஆனது கட்டமைப்புகளை வடிவமைத்தல் (ஆங்கிலம்: designing), கட்டுமானம் (ஆங்கிலம்: construction) மற்றும் மறுவாழ்வுத் (ஆங்கிலம்: rehabilitation) துறையில் ஆய்வு மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு வடிவமைப்பு ஆலோசனை மற்றும் சான்று சரிபார்ப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது.

பயிற்சி பொறியாளர்களுக்கான சிறப்புப் படிப்புகளையும் இந்நிறுவனம் வழங்குகிறது.

வசதிகள் தொகு

இந்த நிறுவனம் பல்வேறு ஆய்வகங்களைக் கொண்டுள்ளது, அவை பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. மேம்பட்ட கான்கிரீட் சோதனை மற்றும் மதிப்பீட்டு ஆய்வகம் (ஆங்கிலம்: Advance Concrete Testing and Evaluation Lab)
  2. மேம்பட்ட கட்டடப் பொருட்களுக்கான ஆய்வகம் (ஆங்கிலம்: Advance Materials Lab)
  3. மேம்பட்ட நில அதிர்வு சோதனை மற்றும் ஆராய்ச்சி ஆய்வகம் (ஆங்கிலம்: Advanced Seismic Testing and Research Lab)
  4. தளர்வு மற்றும் தகர்வு ஆய்வகம் (ஆங்கிலம்: Fatigue and Fracture Lab)
  5. சிறப்பு மற்றும் பலவகை உறுப்புகளின் இயக்கம் சார்ந்த கட்டமைப்புகளுக்கான ஆய்வகம் (ஆங்கிலம்: Special and Multifunctional Structures Lab)
  6. எஃகு கட்டமைப்புகள் ஆய்வகம் (ஆங்கிலம்: Steel Structures Lab)
  7. கட்டமைப்பு நலம் குறித்த கண்காணிப்பு ஆய்வகம் (ஆங்கிலம்: Structural Health Monitoring Lab)
  8. கருத்தியல் மற்றும் கணக்கீட்டு இயக்கவியல் ஆய்வகம் (ஆங்கிலம்: Theoretical & Computational Mechanics Lab)
  9. கோபுரம் சோதனை மற்றும் ஆய்வு நிலையம் (ஆங்கிலம்: Tower Testing & Research Station)
  10. காற்றாலை பொறியியல் ஆய்வகம் (ஆங்கிலம்: Wind Engineering Lab)

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு