கட்டிடக்கலைஞர் சங்கங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பொதுவாகப் பல நாடுகளில், தேசிய மட்டத்தில் கட்டிடக்கலைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கட்டிடக்கலைஞர் சங்கங்கள் உள்ளன. இவை பொதுவாக, கட்டிடக்கலையின் தரத்தை அந்தந்த நாடுகளில் மேம்படுத்துவதையும், கட்டிடக்கலைத் தொழில் நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்துவதையும், கட்டிடக்கலைஞர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. பெரும் எண்ணிக்கையில் கட்டிடக்கலைஞர்களைக் கொண்ட நாடுகளிலும், பரப்பளவில் பெரிய நாடுகளிலும், நிலப்பகுதி அடிப்படையில் இத் தேசிய சங்கங்களின் பிரிவுகள் அமைவது உண்டு. குறிப்பிட்ட நாடுகளுக்குரியனவாயினும், சில சங்கங்கள் அனைத்துலக அளவில் உறுப்பினர்களைக் கொண்டிருப்பதையும் காணலாம். ஆர் ஐ பி ஏ (RIBA) எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படும் பிரித்தானிய கட்டிடக்கலைஞர்களுக்கான அரச சங்கம் (Royal Institute of British Architects) இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். சில குறிப்பிட்ட புவியியற் பகுதிகளுக்குள் அடங்கிய பல நாடுகளைச் சேர்ந்த சங்கங்கள் சில நோக்கங்களுக்காக ஒன்றிணைந்து செயற்படுவதும் உண்டு. ஆசியக் கட்டிடக்கலைஞர் சங்கம் அவ்வாறானதொரு சங்கம் ஆகும்.