கட்டிடத் தகர்ப்பு

கட்டிடத் தகர்ப்பு (Demolition) என்பது பழைய அல்லது இடிபாடுகளுக்கு உள்ளான கட்டிடங்களைத் தகர்த்தல் ஆகும். இச்செயற்பாட்டை இடித்துத் தள்ளல், அழித்தல், வீழ்ச்சியுறச் செய்தல் என்றும் கூறலாம். கட்டிடங்கள் இருக்கும் இடத்தின் மீள்பயன்பாட்டுக்காகவும் சூழலை மேம்படுத்துவதற்காகவும் கட்டிடத் தகர்ப்பு அவசியமாகின்றது.

வட இங்கிலாந்தில் அமைந்திருந்த ஒரு கோபுர அடுக்கு தகர்க்கப்படுவதைக் காட்டும் படம்.

கட்டிடத்தை வீழ்கட்டமைப்பு முறைகளைப் பின்பற்றாமல் வெறுமனே பாரிய சாதனங்கள் கொண்டு தகர்த்தால் அக்கட்டிடங்களைக் கட்டப் பயன்பட்ட பல பொருள்களை மீளவும் பயன்படுத்த முடியாமல் போகும். மேலும் இடித்துத் தள்ளப்பட்ட கழிவுகளைத் தகுந்த மாதிரி அகற்ற வேண்டிய சிக்கலும் உருவாகும். இதனால், கட்டிடத் தகர்ப்புக்குப் பதிலாக வீழ்கட்டமைப்பு முறை தற்சமயம் மேலை நாடுகளில் பரவலாகப் பின்பற்றப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிடத்_தகர்ப்பு&oldid=3416960" இலிருந்து மீள்விக்கப்பட்டது