கட்டிடத் தகவல் மேலாண்மை
இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
கட்டிடத் தகவல் மேலாண்மை (Building Information Management) என்பது, கட்டிடத் திட்டம் ஒன்றினுள் அடங்கியுள்ள இயற்பண்புத் தரவுகளைச் (attributed data) சேகரித்தல், ஒழுங்குபடுத்தல், பகுப்பாய்தல், பகிர்தல் ஆகியவற்றை ஒருங்கே குறிப்பது.[1] "கட்டிடத் தகவல்" என்பது ஒரு குறித்த கட்டுமானத் திட்டம், முறைமைகள் அல்லது கூறுகள் தொடர்பில் பயன்படுத்தக்கூடிய அறிவைக் குறிக்கிறது. இதை உரியமுறையில் மேலாண்மை செய்வதே "கட்டிடத் தகவல் மேலாண்மை" எனலாம்.
தற்காலத்தில் கட்டிடத் தகவல் மேலாண்மை என்பது, கட்டிடமொன்றின் தொடக்க நிலையில் இருந்து பல்வேறு கட்டங்களூடாக அதன் கால முடிவில் உடைக்கப்படும் வரையான எல்லாக் கட்டங்களிலும், விபரம் அறிந்து முடிவுகளை எடுப்பதற்கு உதவியாகப் பகிர் அறிவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
குறிப்புகள்
தொகு- ↑ Wegant, Robert. s., BIM Content Development, John Wiley & Sons, Inc., Hoboken, New Jercy, 2011. p.viii.