கட்டுப்படுத்திய சூழல் வேளாண்மை
கட்டுப்படுத்திய சூழல் வேளாண்மை (CEA) என்பது உள்ளக வேளாண்மை, நிலைக்குத்து வேளாண்மை உள்ளடக்கிய தொழில்நுட்ப அடிப்படையிலான உணவுப் பெருக்க அணுகுமுறை ஆகும். கட்டுப்படுத்திய சூழல் சூழல் வேளாண்மையின் நோக்கம் பயிர் வளர்ச்சிக் கால முழுவதும் திறந்தவெளிக் கூறுபாடுகளைக் கட்டுபடுத்தி உகந்த வளர்ச்சி நிலைமைகளைப் பேணிப் பாதுகாத்தலாகும். இதற்காக, வேளாண்மை பசுமைக் குடிலகத்திலோ தொழிலக வளர்ப்பு நிலைமைகளிலோ மேற்கொள்ளப்படுகிறது. ]].[1]
பயிர்கள் மண்ணற்ற ஊடகத்தில் வளர்த்து, தகுந்த அளௌ நீரும் ஊட்டச்சத்தும் வேர்மண்டலத்துக்குத் தரப்படுவதோடு, அண்றாடமும் போதுமான ஒளி ஆற்றலைப் பெற மிகைநிரப்பு ஒளியூட்டல் அமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. கட்டுப்படுத்திய சூழல் வேளாண்மை நீர் ,ஆற்றல், வெளி, மூலதனம், உழைப்பு போன்ற வளங்களை உகந்த நிலையில் பயன்படுத்துகிறது. கட்டுப்படுத்திய சூழல் வேளாண்மை தொழில்நுட்பங்களில் நீரியல் வளர்ப்பு, மீன்வளர்ப்பு, நீர்தேக்க வளர்ப்பு ஆகியவை அடங்கும்.[2]
தொழில்நுட்ப நடைமுறைப்படுத்தல்
தொகுகட்டுப்படுத்த முடிந்த மாறிகள்:
சூழற் காரணிகள்:
- வெப்பநிலை (காற்று, ஊட்டச்சத்து நீர்மம், வேர்மண்டலம், இலை)
- சார்பீரப்பதம் (%RH)
- கரிம ஈராக்சைடு (CO2)
- ஒளி (செறிவு, கதிர்நிரல், நேரம், இடைவெளிகள்)
வளர்ப்புக் காரணிகள்:
- நீரின் தரம்
- ஊட்டச்சத்துச் செறிவு (PPM of Nitrogen, Potassium, Phosphorus, etc)
- ஊட்டச்சத்து அமிலத்தன்மை(pH)
- பயிரீட்டு கால இடைவெளியும் அடர்த்தியும்
- பயிர்வகை
- பூச்சிக் கட்டுபாடு
கட்டுப்படுத்திய சூழல் வேளாண்மையில், 100% கட்டுபடுத்திய வேளாண்மை முறை முதல் நீர்பாசனமும் சூரிய ஒளியும் காற்றோட்டமும் கணினிக் கட்டுப்பாட்டில் முற்றிலும் தானே இயங்கக்கூடிய கண்ணாடி சில்லங்களில் கட்டுபடுத்தும் வேளாண்மை முறை வரை பல நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வளரும் பயிர்கள் பாலித்தீனால் மூடப்பட்ட சுரங்கப்பாதைகளில் கிளாச்சசு அல்லது பிளாஸ்டிக் படலக் கவிகை போன்ற குறைவான தொழில்நுட்ப தீர்வுகள் பயன்படுத்தி வளர்க்கப்பபடுகின்றன.[3]
கட்டுப்படுத்திய சூழல் வேளாண்மை ஆராய்ச்சியில் பல மாறிகள் கட்டுபடுத்தப் பயன்படுகின்றன. இதனால் விளைச்சலைச் சில மாறிகளைத் தேவையான குறிப்பிட்ட அளவுக்குத் தனிமைப்படுத்திக் கட்டுபடுத்தலாம். அதே சமயத்தில் மற்ற மாறிகள் ஒரே அளவில் வைக்கப்படும். ஒளிச்சேர்க்கை பற்றிய சோதனையின்போது இதை நிறமிக் கண்ணாடி முறையுடன் ஒப்பிடலாம். [4] மற்றொரு ஆய்வுமுறை நீரியல் வளர்ப்பு முறையில் வளரும் கீரைக்குக் கூடுதல் சூரிய ஒளி பயன்படுத்துவதை பற்றிய சோதனை ஆகும்.[5]
கட்டுப்படுத்திய சூழல் வேளாண்மை ஆராய்ச்சியில் பல மாறிகள் கட்டுபடுத்தப் பயன்படுகின்றன. இதனால் விளைச்சலைச் சில மாறிகளைத் தேவையான குறிப்பிட்ட அளவுக்குத் தனிமைப்படுத்திக் கட்டுபடுத்தலாம். அதே சமயத்தில் மற்ற மாறிகள் ஒரே அளவில் வைக்கப்படும். ஒளிச்சேர்க்கை பற்றிய சோதனையின்போது இதை நிறமிக் கண்ணாடி முறையுடன் ஒப்பிடலாம். [6] மற்றொரு ஆய்வுமுறை நீரியல் வளர்ப்பு முறையில் வளரும் கீரைக்குக் கூடுதல் சூரிய ஒளி பயன்படுத்துவதை பற்றிய சோதனை ஆகும்.[7]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ting, K.C.; Lin, T.; Davidson, P.C. (9 November 2016). "Integrated Urban Controlled Environment Agriculture Systems". LED Lighting for Urban Agriculture: 19–36. doi:10.1007/978-981-10-1848-0_2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-10-1846-6. https://link.springer.com/chapter/10.1007/978-981-10-1848-0_2.
- ↑ "Controlled Environment Agriculture Center". University of Arizona. பார்க்கப்பட்ட நாள் 2015-08-16.
- ↑ "Cornell Controlled Environment Agriculture". Cornell University. பார்க்கப்பட்ட நாள் 2015-08-16.
- ↑ "Controlled Environment Agriculture Center". Biodynamics Hydroponics. Archived from the original on 2015-08-10. பார்க்கப்பட்ட நாள் 2015-08-18.
- ↑ A.J. Both; L.D. Albright; R.W. Langhans; R.A. Reiser; B.G. Vinzant (1997). "HYDROPONIC LETTUCE PRODUCTION INFLUENCED BY INTEGRATED SUPPLEMENTAL LIGHT LEVELS IN A CONTROLLED ENVIRONMENT AGRICULTURE FACILITY: EXPERIMENTAL RESULTS". Acta Horticulturae 418 (418): 45–52. doi:10.17660/ActaHortic.1997.418.5.
- ↑ "Controlled Environment Agriculture Center". Biodynamics Hydroponics. Archived from the original on 2015-08-10. பார்க்கப்பட்ட நாள் 2015-08-18.
- ↑ A.J. Both; L.D. Albright; R.W. Langhans; R.A. Reiser; B.G. Vinzant (1997). "HYDROPONIC LETTUCE PRODUCTION INFLUENCED BY INTEGRATED SUPPLEMENTAL LIGHT LEVELS IN A CONTROLLED ENVIRONMENT AGRICULTURE FACILITY: EXPERIMENTAL RESULTS". Acta Horticulturae 418 (418): 45–52. doi:10.17660/ActaHortic.1997.418.5.
External links
தொகு- Urban Agriculture Tool Kit, U.S. Dept. of Agricuture
- "Advances in greenhouse automation and controlled environment agriculture: A transition to plant factories and urban agriculture," January, 2018, Int J Agric & Biol Eng, Vol. 11 No.1, copied at USDA.gov
- "Indoor agriculture quickly gaining speed," May 21, 2015, Vegetable Growers News, retrieved January 09, 2022 (extensive data).