கட்டுமானப் பொறியியல்
கட்டுமானப் பொறியியல் நெடுஞ்சாலைகள், பாலங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டிப் பாதைகள், கட்டிடங்கள், அணைகள், நீர்நிலைகள் போன்ற அகக் கட்டமைப்புகள், பொதுத் திட்டங்களின் கட்டுமான வேலைகளைத் திட்டமிடல், மேலாண்மை செய்தல் ஆகியவற்றோடு தொடர்புடையது.
அடிப்படைக் கட்டுமான வேலைகளுக்கு, பொறியியல், மேலாண்மைக் கோட்பாடுகள், வணிக வழிமுறைகள், பொருளியல், மனித நடத்தை போன்ற துரைகள் சார்ந்த அறிவு தேவை. கட்டுமானப் பொறியியலாளர்கள், தற்காலிக அமைப்புக்களை வடிவமைத்தல், தரத்தை உறுதிசெய்தல், தரக்கட்டுப்பாடு, நில அளவை, கட்டிடப்பொருட் சோதனை, கற்காரைக் (காங்கிரீட்டுக்) கலவை வடிவமைப்பு, செலவு மதிப்பீடு, திட்டமிடல், பாதுகாப்பு, கட்டிடப் பொருள் கொள்முதல், கருவிகள் தேர்வு, வரவு செலவுக் கட்டுப்பாடு போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
கட்டுமான வழிமுறைகளை வடிவமைப்பதிலும், சிக்கல்களைப் பகுத்தாய்வதிலும் பயன்படுத்தப்படும் கணிதம், அறிவியல், பொறியியல் ஆகியவற்றின் பயன்பாட்டு விகிதம் சார்ந்தே கட்டுமானப் பொறியியலும், கட்டுமான மேலாண்மையும் வேறுபடுகின்றன.
கட்டுமானத் தொழில்நுட்பம் திட்டங்களுக்கான கூடுதல் நடைமுறைக் கூறுபாடுகளைப் பயிலும் துறையாகும். கட்டுமானத் தொழில் வல்லுனர்கள் அல்லது தொழில்நுட்பர்கள், கட்டிடப் பொறியார்களைப் போன்றே சில வடிவமைப்புக் கூறுபாடுகளையும் கட்டுமான மேலாளர்களைப் போன்றே சில திட்டக்கள மேலாண்மைக் கூறுபாடுகளையும் பயில்கின்றனர். இவர்கள் கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டுமான மேலாளர்களுக்கும் இடையிலான பணியாளர்கள் ஆவர்.
கல்வி மட்டத்தில் கட்டிடப் பொறியியல் மாணவ்ர்கள் வடிவமைப்பில் முதன்மையான கவனம் செலுத்துகின்றனர். வடிவமைப்பு பெரிதும் பகுப்பாய்வு சார்ந்த்த்தாகும்.எனவே அவர்கள் வடிவமைப்புத் தொழில் வல்லுனர்களாகவே உருவாகின்றனர். இதனால், இவர்கள் தங்களது நான்காண்டுப் படிப்பில் அறைகூவல் மிக்க பல பொறியியல் புல வடிவமைப்புகலைப் பயில்கின்றனர். ஆனால், கட்டுமான மேலாளர்கள் கட்டுமான வழிமுறைகள், முறையிய்ல், செலவுகள், திட்டங்கள், தனியர் மேலாண்மை ஆகியவற்ரைப் பயில்கின்றனர் இவர்களது முதன்மை அக்கறை குறிப்பிட்ட காலத்துக்குள்ளும் ஒதுக்கிய பாதீட்டுக்குள்ளும் வேண்டிய தரத்துடன் திட்டங்களை முடித்தலே ஆகும்.
கட்டுமானத் தொழில்நுட்பவியலருக்கும் கட்டிடப் பொறியாளருக்கும் இடையில் உள்ள வேறுபாடு. பின்னது பொறியியல் புலமாகும். கட்டுமானத் தொழில்நுட்ப மாணவர்கள் அடிப்படை வடிவமைப்புப் பாடங்களுடன் கட்டுமான மேலாண்மைப் பாடங்களையும் படிக்கின்றனர்.
பணிகள்
தொகுகட்டுமானப் பொறியாளர் தன் தேர்வு செய்த தொழிலைப் பொறுத்து நுழைவுநிலை வடிவமைப்புப் பொறியாளர் திட்ட மேலாளர்களுக்கு, ஒப்புதல் வழங்கிய திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடலுக்கும் கட்டுமனத்துக்கும் வேண்டிய வடிவமைப்பு, செலவு மதிப்பீடு ஆகியவற்றை தருகிறார். வடிவமைப்புப் பணி சார்ந்த தொழில்செய்ய தொழில்முறைப் பொறியாளர் உரிமம் பெற்றிருக்கவேண்டும். இப்பணிகளில் ஈடுபடும் தனியர் இந்த உரிமத்தைப் பெறுவதற்கான தேர்வில் கல்லூரியில் இருக்கும்போதே தேர்ச்சி பெறுதல் வேண்டும்.
நுழைவுநிலை கட்டுமான மேலாளர் பதவிகள் திட்டப் பொறியாளர்கள் அல்லது உதவித் திட்டப் பொறியாளர்கள் அழைக்கப்படுகின்றன. இவர்கள் திட்ட்த்துக்கான கொள்முதல் தேவைகளை உருவாக்கி அதர்கான பணியாணைகளை அணியமாக்கி மாதவாரி பாதீட்டு அறிக்கைகளை கூட்டங்களில் வைக்கவேண்டும். அக்கூட்டங்களை நடத்துவதற்கான நிகழ்ச்சிநிரல்களை உருவாக்கி கூட்டத்தை நடத்தவேண்டும். கட்டுமான மேலாண்மைப் பதவிக்கு தொழில்முறை உரிமமேதும் தேவையில்லை; ஆன்னல், அவ்வுரிமத்தைப் பெற்றிருந்தால் அவருக்கு எளிதாக வேலை கிடைக்கும். ஏனெனில், இந்த உரிமம் இருந்தால் இவர்தற்காலிக கட்டிட வடிவமைப்புகளில் ஒப்புதல் கையொப்பம் இடலாம்.
திறமைகள்
தொகுகட்டுமானப் பொறியாளர்கள் சிக்கல் தீர்ப்பவர்கள். இவர்கள் சுற்றுச்சூழல் தேவைகளைச் சந்திக்கவல்ல அகக் கட்டமைப்பாக்கத்துக்கு பேரளவில் பங்களிப்பு செய்கின்றனர். இவர்கள் உரிய அகக் கட்டமைப்பின் வாணாள் சுழற்சி சார்ந்த அறிவைப் பெற்ரிருக்கவேண்டும். வடிவமைப்புப் பொறியாளர்களோடு ஒப்பிடும்போதும் வேறுபடுத்தும்போதும், கட்டுமானப் பொறியாளர்கள் தொழில்நுட்ப அறைகூவல்களைத் தெளிவாகவும் கற்பனைத் திறத்தோடும் சந்திக்கும் கண்ணோட்டப் பார்வையை கூட்டத்தில் முன்வைக்க தெரிந்திருக்க வேண்டும். இப்பணி மேற்கொள்ளும் தனியர் கணிதவியலிலும் அறிவியலிலும் ஆழ்ந்த புரிதலைப் பெற்றிருக்கவேண்டும்; உய்யநிலை, பகுப்பாய்வு சிந்தனைவளத்தோடு கால மேலாண்மை, பணியாளர் மேலாண்மை, சிறந்த கட்டுமான நுட்பத்திறங்கள், தொடர்பாடல் வல்லமை ஆகிய திறமைகளையும் பெற்றிருக்கவேண்டும்.
கல்வித் தேவைகள்
தொகுகட்டுமானப் பொறியாளர்கள் தாம் படிக்கும் கல்லூரி கட்டுமானப் பொறியியல் பாடம் நடத்த உரிய பொறியியல், தொழில்நுட்ப ஏற்பு குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். இந்த ஒப்புதல் தாம் படிக்கும் துறைப்பாடத் தரத்தைக் குறிக்கும். பிறகு அந்த பாட்த்தில் நன்கு பாடம் எடுக்கும் கல்லூரியைத் தகுந்த அறிவுரை வழியாகத் தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து படிக்க சேரவேண்டும்.
கட்டுமானப் பொறியியல் பாடத்திட்டத்தில் பொறியியல்சார் இயக்கவிய்ல், பொறியியல் வடிவமைப்பு, கட்டுமான மேலாண்மை, பொது அறிவியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் கலந்திருக்கும். இது பொதுவாக அறிவியல் இளவல் பட்ட்த்துக்கு வழிவகுக்கும். இந்தப் பட்டமும் ஓரளவு வடிவமைப்பு அல்லது கட்டுமான பட்டறிவு பெரும்பாலான கட்டுமானப் பொறியாளர் நுழைவுநிலைப் பதவிக்குப் போதுமானதாகும். இதில் மேலும் ஆழமான அறிவு பெற பட்டமேற் படிப்புக்குச் செல்லலாம். இந்தக் கல்வியோடு பெரும்பாலும் இவர்கள் பொறியியல் மேலாண்மையிலோ தொழில்வணிக மேலாண்மையிலோ அல்லது கட்டிடப் பொறியியலிலோ பட்டம் பெற்றிருத்தல் நல்லது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- The Book of Knowledge. (1992). Engineering. In The New Book of Knowledge (Vol. 5, pp. 224–225). Danbury, CT: Grolier Incorporated.
- Engineering Technology, D. o. (n.d.). Undergraduate Programs:Construction engineering
technology. Retrieved from https://web.archive.org/web/20110813060637/http://catalog.njit.edu/undergraduate/programs/constructioneng.php
- ABET. (2010, April 8). Accrediting College Programs in Applied Science, Computing,
Engineering and Technology. Retrieved from http://www.abet.org/
- Consistency Transmitter for construction industry.