கட்ட விளையாட்டு
கட்ட விளையாட்டு பொழுதுபோக்கு விளையாட்டாக முதியோரால் விளையாடப்படும். பிறரும் இணையாகச் சேர்ந்துகொள்வது உண்டு. இருவர் ஆடும் விளையாட்டு இது.
ஆட்ட விவரம்
தொகுபடத்தில் உள்ளது போல் அரங்கு ஒன்று வரையப்படும். மூன்று முனைகள் உள்ள அரங்கிற்கு 3 காய்கள் (கற்கள் போன்றவை) பயன்படுத்தப்படும். இருவரும் வெவ்வேறு அடையாளமுள்ள காய்களைப் பயன்படுத்துவர். மாறி மாறி அவர்கள் காயை இறக்குவர். முழுதும் இறக்கிய பின்னர் நகர்த்துவர். அடுத்தவர் காய்கள் நேர்க்கோட்டில் அமையாவண்ணம் தடுப்பர். ஆடுபுலி ஆட்டத்தில் புலிக்காய்கள் வெட்டப்படும். ஆனால் இந்த ஆட்டத்தில் காய்கள் வெட்டப்படுவது இல்லை.
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- கி. வா. ஜகந்நாதன், குழந்தை உலகம், சென்னை அமுத நிலையம் வெளியீடு, 1955
- முனைவர். சி. பாலசுப்பிரமணியன், மலர் காட்டும் வாழ்க்கை, மதுரைப் பல்கலைக் கழக ஒன்பதாவது கருத்தரங்கு மலர், 1977