கணக்கியல் அனுமானங்கள், கொள்கைகள் மற்றும் கருத்துக்கள்

கணக்கியல் அனுமானங்கள், கொள்கைகள் மற்றும் கருத்துக்கள் கணக்கியலின் அடித்தளமாக விளங்குபவை ஆகும்.

  • வணிகத் தனித்தன்மை அனுமானம் (Business Entity Assumption)[1]
  • பண மதிப்பீட்டு அனுமானம் (Money measurement Assumption)[2]
  • நிறுவனத் தொடர்ச்சி அனுமானம் (Going Concern Assumption)
  • கணக்கியல் கால அனுமானம் (Accounting Period Assumption)
  • இரட்டைத் தன்மை கருத்து (Dual Aspect Concept)
  • புராதன அடக்கமுறை கருத்து (Historical Cost Concept)
  • தொடர்ச்சி மரபுக் கொள்கை (Consistency Principle)
  • உண்மை உணர்த்தும் கொள்கை (Materiality Principle)
  • தீர்வு கருத்து (Realisation Concept)
  • சரிபார்ப்பு மற்றும் ஆதார நோக்கக் கருத்து (verifiable and objective evidence Concepts)
  • பொருத்துகைக் கருத்து (Matching Concept)
  • முழு வெளியீட்டுக் கருத்து (Full Disclosure Concept)
  • குறுகிய கண்ணோட்டக் கொள்கை (prudence Principle)

வணிகத் தனித்தன்மை அனுமானம்

தொகு

இந்தக் கருத்து வணிக நிறுவனத்தின் உரிமையாளரும் வணிக நிறுவனமும் ஒரே நபர் அல்ல என்று கூறுகிறது. இந்தக் கருத்தின்படி அனைத்துப் பரிவர்த்தனைகள் மற்றும் நிதிசார் தகவல்கள் அனைத்தும் வணிகக் கண்ணோட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கருத்தின்படி முதலீட்டைச் செய்யும் உரிமையாளரே கணக்குகளில் கடனீந்தோராகவே கருதப்படுவர். நிறுவன உரிமையாளரின் தனிப்பட்ட பரிவர்த்தனைகள் ஒரு போதும் கணக்குகளில் கண்பிக்கப்படக்கூடாது.

பண மதிப்பீட்டு அனுமானம்

தொகு

கணக்கியலில் பதியப்படும் அனைத்து வணிக நடவடிக்கைகளும் நிதி சார்பு உடையவையாய் இருத்தல் வேண்டும். மேலும் பண அளவிட முடிகின்ற பரிவர்த்தனைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். எ.கா: இரு துறை மேலாளர்களுக்கு இடையே உள்ள சண்டை நமது தொழிலைப் பாதிக்கலாம். ஆனால் அதனை நம்மால் கணக்கேட்டில் பதிய முடியாது.

நிறுவனத் தொடர்ச்சி அனுமானம்

தொகு

இந்தக் கருத்தின்படி ஒரு நிறுவனம் பொருள் ஈட்டும் (Profit) என்ற எண்ணத்திலேயே உருவாக்கப்படுகிறது. எனவே இந்த எண்ணத்திலேயே அனைத்துப் பரிவர்த்தனைகளும் பதிவு செய்யப்படும். அந்த நிறுவனம் அதன் விருப்பப்படியே தொடரலாம் அல்லது தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம்.

கணக்கியல் கால அனுமானம்

தொகு

நிதித் தகவல்களைப் பயன்படுத்துவோர் ஒரு குறிப்பிட்ட கால அளவுகளின் இடையே அந்த நிதித் தகவல்களின் தேவையில் இருப்பர். எனவே கணக்குகளை முடிப்பது அவசியம். நிதி அறிக்கைகள் அனைத்தும் கணக்கியல் காலத்தின் இறுதியில் கொடுக்கப்பெற வேண்டும். பொதுவாக கணக்கியல் காலம் ஓர் ஆண்டாக இருக்கும் (52 வாரங்கள்) சனவரி - டிசம்பர் அல்லது மார்ச் - ஏப்ரல். ஒரு சில நிறுவனங்கள் 6 மாதத்தில் கூட நிதி அறிக்கைகளை வெளியிடக்கூடும்.

இரட்டைத் தன்மை கருத்து

தொகு

இக்கொள்கையின்படி அனைத்துப் பரிவர்த்தனைகளிலும் வரவு மற்றும் பற்று இடம் பெற்றிருக்க வேண்டும். இரண்டில் ஒன்று மட்டும் இடம் பெற்றால் அது முழுமையான கணக்காகப் பதிவாகாது.

புராதன அடக்கமுறை கருத்து

தொகு

இக்கருத்தின்படிச் சொத்துக்கள் வாங்கப்பட்ட விலையிலேயே நாம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் சந்தை மதிப்பைப் பதியாது அடக்க விலையை மட்டுமே பதிய வேண்டும். எ.கா: ஒரு நாற்காலியின் விலை உரூபாய் 200 மேலும் அதன் சந்தை மதிப்பு உரூபாய் 300 எனக் கொண்டால் அது வாங்கப்பட்ட விலையான உரூபாய் 200தான் பதிய வேண்டும்.

தொடர்ச்சி மரபுக் கொள்கை

தொகு

இக்கொள்கையின்படி ஒரு நிறுவனத்தின் கணக்குப் பதிவியியலில் எத்தகைய விதிகள், நடைகள், முறைகள்  பயன்படுத்தப்படுகின்றதோ அதே வழக்கில் பின் வருகின்ற காலங்களிலும் எழுதப்பெற வேண்டும். கணக்குப் பதிவியலில் ஒரே வகையான முறைகள் பயன்படுத்தப் பெற்றால்தான் பின்வரும் காலத்தில் சரிபார்ப்பு போன்ற செயல்களில் ஈடுபடும்போது ஏதுவாக இருக்கும்.

உண்மை உணர்த்தும் கொள்கை

தொகு

இக்கொள்கை நமக்குச் சார்புடைய தகவல்களை மட்டுமே நிதிநிலை அறிக்கைகளைச் சேர்க்க வேண்டும் என்றும் தேவையற்ற தகவல்களை அதற்கு இனமான பிற தகவல்களுடன் இணைத்து விடவேண்டும் என்று கூறுகிறது.

தீர்வு கருத்து

தொகு

ஒரு நிறுவனத்தின் சொத்துக்களின் மதிப்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் நிறுவனம் அதை உணரும் வரை மாற்றம் செய்யக் கூடாது. புராதன அடக்குமுறைக் கருத்தின்படி அதன் அடக்குமுறை விலையே பதியப்படுவதால் நிறுவனம் அதை உணரும்போதுதான் மதிப்பில் மாற்றம் செய்ய வேண்டும்.

சரிபார்ப்பு மற்றும் ஆதார நோக்கக் கருத்து

தொகு

குறிப்பேட்டில் பதியப்படும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் சரியான சான்று இருக்க வேண்டும். எடுத்துகாட்டாக இரசீது போன்றவையின் அடிப்படையில் நாம் பரிவர்த்தனைகளைப் பதியவேண்டும். இவ்வாறு பதியப்படும் பரிவர்த்தனைகளின்  உண்மைத் தன்மை இவ்வாறு செய்வதனால் எளிதில் பிறருக்குப் புரியும்.

பொருத்துகைக் கருத்து

தொகு

இக்கருத்து ஒரு கணக்கு ஆண்டின் அனைத்துச் செலவுகளையும் வரவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தான் ஈட்டிய பொருள் (Profit) எவ்வளவு என்று சரியாகத் தெரியும். இது துல்லியமாகக் கணக்கிடுவதற்கு வழிவகை செய்கிறது.

முழு வெளியீட்டுக் கருத்து

தொகு

கணக்கு அறிக்கைகள் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் தகவல்களைத் தருகிறது. எனவே அவை அனைத்தும் முழுமையாக வெளியிடப்பட வேண்டும். எந்த ஒரு தெளிவின்மையும் ஒழிவு மறைவுகளும் இருத்தல் கூடாது.

குறுகிய கண்ணோட்டக் கொள்கை

தொகு

இந்தக் கொள்கையின்படி அனைத்து எதிர்பார்க்கப்படும் நட்டங்களையும் பதியவேண்டும். ஆனால் எதிர்பார்க்கும் இலாபங்களைப் பதியக் கூடாது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "What Is Business Entity Assumption?". Small Business - Chron.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.
  2. "Money measurement concept - Wikipedia". en.m.wikipedia.org. பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.
  3. {{cite book}}: Empty citation (help)