கணக்கீட்டு ஆய்வு
கணக்கீட்டு ஆய்வு அல்லது கணக்கியல் ஆய்வு (Accounting research) என்பது பொருளாதார செயல்முறை நிகழ்வுகளின் விளைவுகள் மற்றும் பொருளாதார நிகழ்வுகளின் அறிக்கை தகவல்கள் விளைவுகள் என்பவற்றை உள்ளடக்கியது. இந்த ஆய்வானது நிதிக் கணக்கியல் முகாமைத்துவம், கணக்கியல் தணிக்கை மற்றும் வரிவிதிப்பு உட்பட்ட பரந்த ஆராய்ச்சிப் பகுதிகளை உள்ளடக்கியது.
கணக்கீட்டு கல்வி சம்பந்தமான ஆய்வானது கணக்கியல் துறையின் அனைத்து அம்சங்களையும் அறிவியல் முறைமையின் மூலம் ஆராய்ச்சியின் போது பயிற்சிக் கணக்காளர்கள், தமது வாடிக்கையாளர்கள் அல்லது குழு சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்க கவனம் செலுத்துகின்றது. கணக்கீட்டு ஆராய்ச்சியானது கணக்கீட்டு பயன்பாடுகளில் அதிக பங்களிப்பை செய்கின்றது. எனினும் கணக்கீட்டு கல்வி முறைகளில் கடந்த தசாப்தங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கணக்கியலானது கணக்கீட்டு கல்வி மற்றும் கணக்கீட்டு பயன்பாடுகள் எனும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
முன்னோட்டம்
தொகுகல்வி ஆய்வாளர்கள் மற்றும் பயிற்சிக் கணக்காளர்கள் மூலம் கணக்கீட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. கணக்கீட்டுத் துறையின் அனைத்துப் பகுதிகளில் உள்ள பிரச்சினைகளையும் அறிவியல் முறைமையின் மூலம் மதிப்பீடு செய்கின்றது. இவ் ஆய்வானது நிதித் தகவல், சோதனைகள் மற்றும் கணினி உருவகப்படுத்தல் உட்படப் பல்வேறு சான்றுகளைப் பயன்படுத்துகின்றது.[1][2][3]
பயிற்சிக் கணக்காளர்களின் ஆய்வானது வாடிக்கையாளர்கள் அல்லது குழு சம்பந்தமான பிரச்சினைகளை உடனடித் தீர்வு காண்பதற்காகக் கவனம் செலுத்துகின்றது. உதாரணமாக புதிய வாடிக்கையாளர் வரிட் சட்டத் தாக்கங்கள், நிதிக்கூற்றுக்களில் அசாதாரண நிதி வழங்கல் நடவடிக்கை என்பவற்றை உள்ளடக்கியது.[1]
கணக்கியல் ஆய்வு, தரநிலை அமைப்பு போன்ற கணக்கியல் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சர்வதேச கணக்கியல் தரநிலைகள் வாரியம் (IASB) சில ஆய்வுத் திட்டங்களில் உள்ள சிக்கல்களை ஆராய்கிறது. இவற்றின் முடிவுகள், சிக்கல்களை அதன் செயலில் உள்ள நிகழ்ச்சி நிரலுக்கு நகர்த்தலாமா என்பதைத் தீர்மானிக்கலாம்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Gordon, Teresa P., and Jason C. Porter. 2009. "Reading and Understanding Academic Research in Accounting: A Guide for Students." Global Perspectives on Accounting Education 6: 25-45.
- ↑ Covaleski, M. A.; Dirsmith, M. W. (1990). "Dialectic tension, double reflexivity and the everyday accounting researcher: On using qualitative methods". Accounting, Organizations and Society 15 (6): 543–573. doi:10.1016/0361-3682(90)90034-R. https://archive.org/details/sim_accounting-organizations-and-society_1990_15_6/page/543.
- ↑ Jönsson, S.; Macintosh, N. B. (1997). "CATS, RATS, and EARS: Making the case for ethnographic accounting research". Accounting, Organizations and Society 22 (3–4): 367–386. doi:10.1016/S0361-3682(96)00040-2.
- ↑ Research projects, IFRS Foundation, 2013, archived from the original on 2013-12-28, பார்க்கப்பட்ட நாள் December 27, 2013