கணக்குகளின் வகைப்பாடு (கணக்குப் பதிவியல்)
பரிவர்த்தனைகள் மூன்று வகைப்படும்
அவை:
1.நிறுவனங்கள் மற்றும் தனிநபர் சார்ந்த பரிவர்த்தனைகள்
2.சரக்குகள்,சொத்துக்கள், பணம் சார்ந்த பரிவர்த்தனைகள்
3.இலாபம் மற்றும் நட்டங்கள் சார்ந்த பரிவர்த்தனைகள்.
I. ஆள்சார் கணக்குகள் : ( Personal Accounts)
தொகு-தனி நபர் தொடர்பான கணக்குகளைத் தனிப்பட்ட கணக்குகள் / ஆள்சார் கணக்குகள் எனக் கூறலாம்.
ஆள்சார் கணக்குகள் இரண்டு வகைப்படும்.
அவை:
1.தனிநபர் கணக்கு (Natural Person)
2.சட்டமுறை அமைப்புகள் (Artificial Person)
தனிநபர் கணக்குகள்:
தொகுஇந்தக் கணக்குகள் ஒரு தனிப்பட்ட நபரைக் குறிக்கும் கணக்குகள்.
எ.கா :அருள் க/கு
சட்டமுறை அமைப்புகள்:
தொகுசங்கம், குழு மற்றும் அமைப்புகள்சார் கணக்குகள்
எ.கா. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
II ஆள்சாராக் கணக்குகள்:
தொகுஆட்களைச் சாராத கணக்குகளை ஆள்சாராக் கணக்குகள் என்று கூறுவர்.
இது இரண்டு வகைப்படும். அவை:
1.சொத்துக் கணக்கு (Real account)
2.பெயரளவில் கணக்கு (Nominal Account)
சொத்துக் கணக்கு:
தொகுஒரு தனி நிறுவனத்தின் சொத்துக்களை / உடைமைகளைக் குறிக்கும் கணக்குச் சொத்துக் கணக்கு.
எடுத்துக்காட்டு : நிறுவனத்தின் மேசைகள்
பெயரளவு கணக்கு:
தொகுஇந்தக் கணக்கிற்கு உருவம் கிடையாது. வணிகச் செயல்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளில் நிகழும் இலாப நட்டங்களைப் பற்றிய கணக்கு.
எடுத்துக்காட்டு : சம்பளக் கணக்கு[1]
மேற்கோள்கள்:
தொகு- ↑ Chandru. v. "தமிழில் டேலி" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.