கணித பெட்டி கருவிகள்
வடிவியல் கருவிகள்
கணித பெட்டியின் கருவிகள் என்பவை மாணவர்கள் கணிதத்தில் வடிவியலுக்காக பயன்படுத்தும் கணிதப் பெட்டியில் உள்ள பொருட்களைக் குறிப்பதாகும். கணிதப் பெட்டியில் உள்ள பொருட்களும் அவற்றின் பயன்களும் கீழ்கண்டவாறு,
- . அளவுகோல்: ஒரு விளிம்பு சென்டி மீட்டரிலும், மற்றொரு விளிம்பு அங்குல அளவிலும் குறிக்கபட்டிருக்கும். இதனைக்கொண்டு கோடுகள் வரையலாம் மற்றும் கோட்டுதுண்டுகளின் நீளங்களை அளக்கலாம்.
- . கவராயம்: ஒரு பக்கம் கூரிய முனையும் மறு பக்கம் பென்சில் பொருத்தகூடிய கருவியாகும். இதனைக்கொண்டு வட்டம் வரையலாம் மற்றும் வட்ட பகுதியை வரையலாம்.
- . கவை: இரு பக்கங்களும் கூரிய முனைகளை கொண்டிருக்கும் ஒரு கருவியாகும். இதனைக்கொண்டு கோட்டுதுண்டுகளின் நீளங்களை அளக்கலாம் மற்றும் ஒப்பிடலாம்.
- . கோணமானி: அரைவட்ட வடிவில் இரு புறமும் பூஜ்ஜியம் பாகையில் தொடங்கி நூற்றி என்பது பாகையில் குறிக்கபட்டிருக்கும். இதனைக்கொண்டு கோணங்களை அளக்கலாம் மற்றும் வரையலாம்.
- . மூலை மட்டங்கள்: அ). 45 பாகை, 45 பாகை மற்றும் 90 பாகை கோண அளவுகளை கொண்ட மூலை மட்டம். ஆ). 30 பாகை, 60 பாகை மற்றும் 90 பாகை கோண அளவுகளை கொண்ட மூலை மட்டம். இவைகளை கொண்டு செங்குத்து மற்றும் இணை கோடுகள் வரையலாம்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழக அரசு வெளிட்ட ஆறாம் வகுப்பின் முதல் பருவத்தின் இரண்டாம் தொகுதியின் 69 ஆம் பக்கம்.