கணினித் திரை
கணினித் திரை அல்லது கணினிக் காட்சித்திரை (Computer monitor) என்பது படங்களைக் காட்சிப்படுத்தும் ஒரு மின்னணுச் சாதனமாகும். கணினியுடன் மனிதர் ஊடாட காட்சித்திரையே பெரிதும் பயன்படுகிறது. எதிர்மின்வாய் கதிர்க் காட்சிப்பெட்டி, எல்சிடி திரை ஆகிய இரு வகை காட்சித்திரைகள் தற்போது வழக்கத்தில் உள்ளன.