கணிமை வரலாறு
20ஆம் நூற்றாண்டின் முன்னமே கணிப்பொறியியல் துறைக்கான முன்னேற்றம் துவங்கிவிட்டது. கணிதம் சார்ந்த கண்டுபிடிப்புக்களும் அதன் சார்ந்த வளர்ச்சியும் கணிப்பொறியியல் என்ற துறை வளர முன்னோடியாக இருந்தன.
வரலாறு
தொகுபாபிலோனிய காலத்திலிருந்தே (இன்றைய ஈராக்)அதாவது 2700–2300 பி சி க்கு முன்பே அபாகஸ் என்ற கருவி பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.[1] 1901ல் அண்டிகைத்ரியா(Antikythera) என்ற தீவிலிருந்து உடைப்பட்ட கிரேக்க கால கப்பலிலிருந்து இயந்திரவியல் சார்ந்த கணினி கிடைத்தது. இது பழங்காலத்தில் வானவியல் ஆய்விற்கு பயன்படுத்திப்படிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[2]