கண்டமநாயக்கனூர் (பாளையம்)
தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்ற போது, மதுரை மண்டலத்தை நிர்வகித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தை 72 பாளையங்களாகப் பிரித்தார். இப்பாளையங்களில் கண்டமநாயக்கனூர் எனும் பாளையமும் ஒன்று. இப்பகுதியின் பாளையக்காரராக இருந்த கண்டமநாயக்கர் என்பவரின் பெயரால் இவ்வூர் அழைக்கப்படுகிறது. கண்டமநாயக்கனூர் பிற்காலத்தில் கண்டமனூர் என்று மருவியது. [1]