கண்டி கோத்திரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கண்டி கோத்திரம் என்பது திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டம் அசனமாப்பேட்டை கிராமத்தில் வாழ்ந்து வரும் ஒரு மரபினரைக் குறிக்கும். இங்கு பல நூற்றாண்டு காலமாக செங்குந்தர் மரபினர் வாழ்ந்து வருகின்றனர். வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு பர்வத இராமநாத ஈசுவரன் திருக்கோயில் ஐந்து நிலை கொண்ட கோபுர வாயிலுடன் உள்ளது.
ஆண்டுதோறும் முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி பிரம்ம உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் ஒனபது நவவீரர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து சூர சம்ஹாரம் வதை நிகழ்ச்சியும் வள்ளி தெய்வயானை திருமணமும் சிறப்பாக நடைபெறும். இந்த நவீன வீரர்களில் முருகப்பெருமானுக்கு தலையாய வீரனாக திகழ்பவர் வீரபாகு தேவர்.அவர் கையில் ஏந்திருக்கும் ஆயுதம் கண்டி என்றும் அழைப்பர். முருகனுக்கு வேலன் என்ற பெயருண்டு. முருகப்பெருமானை முழுமுதற் கடவுளாக கொண்ட கௌமாரம் பிரிவு செங்குந்தர்கள் வேலன் வீட்டு வகையறாவைச் சேர்ந்தவர்கள். இம்மரபினரே கண்டி கோத்தரம் இனத்தைச் சேர்ந்தவர்கள்.அது மட்டுமல்லாமல் இவர்கள் செங்குந்தர்களிலே கிராம அதிகாரம் படைத்த செங்குந்த சமுதாய சபையில் கிராமணி பதவியை முதன் முதலில் ஏற்று கிராம பரிபாலனம் செய்தவர்கள். எனவே அவ்வழி வந்த மரபினருக்கு இன்றும் கிராமணிவீடு என்றே அழைக்கப்படுகின்றனர். கண்டி எனில் வீரம் என்றும் பொருள் கொள்ளலாம்