கண்ணங் கொற்றனார்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கண்ணகாரங் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். ஒரே ஒரு பாடல் இவர் பாடியதாக உள்ளது. அது நற்றிணை 156ஆம் பாடலாக உள்ளது.
பாடல் தரும் செய்தி
தொகுகாலடி தெரியாத காரிருளில் வருகிறாய். எம் வீட்டுக் கட்டுக் காவலை மீறி வருகிறாய். இப்படி வர வேண்டாம். நாங்கள் உன்னையும் உன் மலையையும் பாடிக்கொண்டு கிளி ஒட்டுவோம். அங்கு வரலாம் என்று கூறும் பாடல் இது.
- மக்கள் பண்பு
'சிறுகுடி அரியல் ஆர்கையர் ஆயினும் பெரியர்' (சிற்றூரில் வாழ்பவர்கள் நீச்சல் தண்ணீர் என்னும் அரியல் உண்டு வாழ்பவர் ஆயினும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வர்) என்று பாடல் குறிப்பிடுகிறது.