கண்ணம் புல்லனார்

கண்ணம் புல்லனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இரண்டு பாடல்கள் இவர் பாடியனவாக உள்ளன. அவை அகநானூறு 63, நற்றிணை 159

பாடல் தரும் செய்தி தொகு

அகநானூறு 63 தொகு

அகநானூறு 63 தொகு

தொல்காப்பியம் தொகு

தலைவியின் தோழி செவிலித்தாயின் மகள் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

  • 'தோழி தானே செவிலி மகளே' - தொல்காப்பியம் - களவியல் 34
  • 'கேளாய் வாழியோ மகளை! நின் தோழி' என்று தொடங்கிச் செவிலி கூறுவதாக அமைந்துள்ள இந்தப் பாடல் இந்தத் தொல்காப்பிய நூற்பாவுக்கு இலக்கியமாகத் திகழ்கிறது.

உன் தோழி இந்த ஊரே புலம்பும்படி விட்டுவிட்டு அவனுடன் சொன்றுவிட்டாள். அதற்காக நான் கவலைப்படவில்ல. அவள் சென்ற வழியை எண்ணும்போதுதான் என் கண்கள் அழுகின்றன என்கிறாள் செவிலி.

யானை மிதித்த புழுதியில் செம்பூழ்ப் பறவை தன் பெடையொடு விளையாடும் வழி அது. அதனைப் பிடிக்கக் கள்வர் தண்ணுமை முழக்குவர். அந்த ஒலியைக் கேட்டு அவள் நடுங்குவாளே என்றுதான் கவலைப்படுகிறேன் - என்கிறாள் செவிலி.

நற்றிணை 159 தொகு

நெய்தல் திணையைச் சேர்ந்த இந்தப் பாடலில் தோழி தலைவியின் நிலைமையையும், உலகியலையும் கூறித் திருமணம் செய்துகொண்டு தலைவியை அடையுமாறு தலைவனிடம் கூறுகிறாள்.

உவமை நலம் தொகு

  • வானத்தைத் துண்டாக்கி வைத்தது போன்றது கடல்.
  • பகலில் நிலாவைக் குவித்து வைத்தது போன்றது மணல்மேடு.
  • கடலிலும் மணலிலும் சங்கு மேய்வது கொக்கு மேய்வது போல் இருக்கும்.
பழந்தமிழ் தொகு

(மணி = நீல நிற வானம்)
'மணி துணித்து அன்ன மாயிரும் பரப்பின் உரவுத் திரை கெழீஇய பூ மலி பெருந்துறை'

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணம்_புல்லனார்&oldid=3178202" இலிருந்து மீள்விக்கப்பட்டது