கண்ணிமைமுடிச் சாயம்
கண்ணிமைமுடிச் சாயம் (அல்லது) மஸ்காரா (Mascara) ஒரு ஒப்பனைப் பொருள்[1]. பொதுவாக இது கண்களை மேம்படுத்த உதவும். இது கண்ணிமை முடிகளை (eyelashes) நீளமாக்கவோ, கருப்பாகவோ, தடிப்பாகவோ காட்டும். பொதுவாக இது திரவ வடிவில், அணிச்சல் அல்லது களிம்பு வடிவில் இருக்கும். இது நிறமிகள் ( pigments), எண்ணெய் பொருள்கள் (oils), மெழுகுகள் (waxes) மற்றும் காப்பீட்டு வேதிப்பொருள்கள் (preservatives) ஆகியவற்றினால் ஆனது.
சொற்பிறப்பியல்
தொகு“மஸ்காரா” என்ற வார்த்தை எங்கிருந்து வந்ததென என்பதில் தெளிவில்லை. இருந்தபொதிலும் 'திரை (mask)' அல்லது 'சாயம் (stain)' எனப்பொருள்படும், ஸ்பானிஷ் வார்த்தையான மஸ்காரா(mascara)விலிருந்து வந்திருக்கலாம் மற்றும் 'திரை' எனப்பொருள் கொடுக்கும் இத்தாலிய வார்த்தையான மஸ்சேரா (maschera)விலிருந்தும் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது[2].
சான்றுகள்
தொகு- ↑ "மஸ்காரா". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 11, 2015.
- ↑ Harper, Douglas. “Mascara.”