கண்ணூர்க் கோட்டை
கண்ணூர்க் கோட்டை என்றறியப்படும் செயிண்ட். ஆஞ்செலோக் கோட்டை கேரள மாநிலத்தின் கண்ணூருக்கு அருகே இருக்கிறது. கண்ணூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அரபிக்கடலோரத்தில் கடலை நோக்கி அமைந்துள்ளது. இக்கோட்டை 1505-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் போர்த்துக்கீசிய வைசிராயால் கட்டப்பட்டது. இக்கோட்டை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஆட்சியாளர்களில் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. 1663-இல் இக்கோட்டை டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்கள் இதனைக் கைப்பற்றி மலபார்ப் பகுதியின் ராணுவ மையமாகப் பயன்படுத்தியுள்ளனர்.[1][2]
கண்ணூர்க் கோட்டை | |
---|---|
கண்ணூர், கேரளா | |
கண்ணூர்க் கோட்டை | |
ஆள்கூறுகள் | 11°51′14″N 75°22′18″E / 11.85389°N 75.37167°E |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1505 |
பயன்பாட்டுக் காலம் |
1505-? |
மேற்கோள்கள்
தொகு- ↑ K. M. Mathew (1988). History of the Portuguese Navigation in India, 1497-1600. Mittal. pp. 165–166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-046-8.
- ↑ Neto, Ricardo Bonalume (2002-04-01). "Lightning rod of Portuguese India". MHQ: The Quarterly Journal of Military History (Cowles Enthusiast Media Spring): p. 68.