கண்ணெழுத்து

பழங்கால தமிழகத்தில் ஏற்றுமதியாளர்கள் பண்டப் பொதிகளின் மீது சரக்கின் பெயரையும், அளவையும் படமாக வரைந்தனுப்பிய செய்தி சிலப்பதிகாரத்தில் (சிலப்பதிகாரம் 26-136, 5-112) உள்ளது. இவ்வாறு அடையாளம் காட்டி எழுதப்படுவது கண்ணெழுத்து எனப்படுகிறது. அரசு கடிதங்களுக்கு மன்னர்களின் திருமுகங்களை மறைவடக்கமாக முத்திரையிட்டு அனுப்பினர். சிலப்பதிகார மாதவியும், சீவக சிந்தாமணி காந்தருவதத்தையும் இவ்வாறு தங்கள் கடிதங்களுக்கு முத்திரையிட்டு அனுப்பினர். (சிலப்பதிகாரம் 13-79, சிந்தாமணி 1767) எனவே கண்ணெழுத்து என்பது அடையாள எழுத்து அல்லது குறியீட்டெழுத்து எனலாம். அரசனது திருமுகங்களை எழுதி அதன் மேல் அரச முத்திரையிடுவோர் கண்ணெழுத்தாளர் எனப்படுகிறார். இதை கீழ்காணும் சிலப்பதிகாரப் பாடல் மூலம் அறியலாம்.

கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் மண்ணுடை
முடங்கலம் மன்னவர்க் களித்தாங்கு (சிலப்பதிகாரம் 26:170-171)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணெழுத்து&oldid=1915512" இலிருந்து மீள்விக்கப்பட்டது