கண்ணையன் தட்சிணாமூர்த்தி
கண்ணையன் தட்சிணாமூர்த்தி (Kannaiyan Daksnamurthy, பிறப்பு:29 மார்ச்சு 1962) என்பவர் சாகித்ய அக்காதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளராவார். இவர் மமங் தய் எழுதிய பிளாக் ஹில் நாவலின் மொழியாக்கமான கருங்குன்றம் நூலுக்கு 2023ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். [1]
கண்ணையன் தட்சிணாமூர்த்தி | |
---|---|
பிறப்பு | 29 மார்ச்சு 1962 திருமருகல், பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம், (தற்போது நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா |
தொழில் | மொழிபெயர்ப்பாளர் |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கருங்குன்றம் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் எனும் ஊரில் 1962 மார்ச்சு 29 அன்று சிங்காரவள்ளி - வீ. கண்ணையன் இணையருக்கு மகனாகப் பிறந்தார் தட்சிணாமூர்த்தி.[2][3] முதுகலைப் பொருளியல், முதுகலைத் தமிழ் மற்றும் இளங்கலை சட்டவியல் ஆகிய பட்டங்களைப் பெற்றவர். இந்திய செய்திப் பணி இளநிலை அலுவலராகவும், அகில இந்திய வானொலியில் நிலைய இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1995 முதல் மொழிபெயர்ப்புத் துறையில் செயல்பட்டுவருகிறார்.[2] மத்திய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளையில் (நேஷனல் புக் டிரஸ்ட்) மொழிபெயர்ப்பாளராகப் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சாகித்திய அகாதமி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகியவற்றுக்கும் பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஇவர் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.[4] அவர் மொழிபெயர்த்துள்ள நூல்களின் தலைப்புகள் வருமாறு:
- எனது அரசியல் வாழ்க்கை
- மகாத்மா காந்தியின் சிந்தனைகள்,
- புரட்சி 1857
- இந்தியாவின் தேசியப் பண்பாடு,
- இந்திராகாந்தி ,
- புத்தாக்க வாழ்வியல் கல்வி,
- அறிவுத்தேடலில் அறிவியல் உணர்வு,
- உறவுப்பாலம்: இலங்கைச் சிறுகதைகள்,
- சுவாமி விவேகானந்தர்: இளையோரின் எழுச்சி நாயகன்,
- கண்ணியமான பொருளாதார வளர்ச்சி
- மக்களாட்சி
- நமது அரசியலமைப்பு
- மனித குலத்தை அச்சுறுத்தும் பிளாஸ்டிக்
- இமயத்தில் விவேகானந்தர்
- தாவரங்களின் பரிணாம வளர்ச்சி
- எம்மும் பெரிய ஹூமும்
- கருங்குன்றம்
- நன்னெறி காட்டிய நல்லோர்
- யார்? ஆர்வமூட்டும் 50 விடைகளுக்கான வினாக்கள்
- குளோன்சியின் சாகசங்கள்
- இந்தியச் சட்ட முறைமை
- தாய் மண்
- அசாமின் அஞ்சா நெஞ்சன் லாச்சித் பர்பூக்கன்
- நல்லியல்புகளைப் பரப்பிய நற்பணி: மனதின் குரல்@100
- Kundrakkudi Adigal-குன்றக்குடி அடிகள் (தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு)
- Ashokamitran-அசோகமித்திரன் (தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு)
- விவரணை(Tamil translation of International Booker prize 2024 Shortlisted title 'THE DETAILS' By IA GENBERG (ISBN978-81-978402-5-8)
விருதுகள்
தொகு- தமிழ் வளர்ச்சித் துறை மொழிபெயர்ப்பாளர் விருது 2022
- நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் 2022
- சாகித்திய அகாதமி விருது 2023
மேற்கோள்கள்
தொகு- ↑ "கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..". தினமலர் கல்விமலர். https://m.dinamalar.com/kmalardetail.php?id=63601. பார்த்த நாள்: 13 March 2024.
- ↑ 2.0 2.1 "நூல்களுக்கு கவனம் கிடைப்பதில்லை..."சாகித்ய அகாடமி விருது பெறவுள்ள கண்ணையன் பேச்சு." தினத்தந்தி. பார்க்கப்பட்ட நாள் 13 March 2024.
- ↑ "சாகித்திய அகாடமி மொழிபெயர்ப்பு விருது: கண்ணையன் தட்சிணாமூர்த்தி - பன்முக மொழிபெயர்ப்பாளர்". Hindu Tamil Thisai. 2024-03-17. பார்க்கப்பட்ட நாள் 2024-03-18.
- ↑ "கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு". மாலைமலர். https://www.maalaimalar.com/news/state/sahitya-akademi-award-announcement-for-kannayan-dakshinamurthy-707353. பார்த்த நாள்: 13 March 2024.