கண்புதை விளையாட்டு
கண்புதை விளையாட்டு தொன்றுதொட்டு இன்றும் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்று.
சங்கப் பாடல் குறிப்புகள்
தொகுசங்கப்பாடல் ஒன்று இந்த விளையாட்டைக் காதலன் ஒருவன் தன் காதலியிடம் விளையாடியதாகக் குறிப்பிடுகிறது.[1]
பிரிந்து சென்ற கணவனின் வரவை எண்ணிக் காத்திருந்தாள் ஒரு தலைவி. அவள் வீட்டில் பல்லி ஒலித்தது. அப்போது ஒருகையால் தன் இரு கண்ணங்களையும் ஒற்றிப் பல்லியைப் பரவித் தொழுதாள். வீட்டின் ஒருபுறம் நின்றுகொண்டிருந்தாள். அது மாலை வேளை. பிரிந்து சென்ற தலைவன் மீண்டான். அவளது நிலையை உணர்ந்தான். அவளுக்குத் தெரியாமல் அவளுக்குப் பின்புறம் சென்றான். தன் கைகளை வளைத்து அவளது கண்களைப் பொத்தினான். அவள் யார் என்று கண்டுபிடித்துச் சொல்லிவிட்டாள். பின் அவளது தலைப்பின்னலைத் தொட்டு மகிழ்ந்தான். அதன்பின் அவளது வளையலோடு கைகளைத் தடவி மகிழ்வித்தான்.
இவற்றையும் பார்க்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑
ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப்
பாங்கர் பல்லி படுதொறும் பரவி
கன்றுபுகு மாலை நின்றோள் குறுகி
கை கவியாச் சென்று கண்புதையாக் குறுகிப்
பிடிக்கை அன்ன பின்னல் தீண்டித்
தொடிக்கைத் தைவரத் தோய்ந்தன்று கொல்லோ – அகநானூறு 9-20மு.