கண்மாய் (ஒலிப்பு) என்பது குளம், ஏரி போன்ற ஒரு நீர்நிலை. இது தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் மிகுந்து காணப்படுகிறது.

கண்மாய் நீர் மக்களுக்கு குடிக்கவும், வேளாண்மைக்கும் பயன்படுகிறது. மேலும் சில கண்மாய்கள் பறவைகள் மிகுந்து வாழ ஏற்றதாக உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேத்தமங்கலம் கண்மாய் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய கண்மாய்கள் சில கிலோமீட்டர் வரை நீள, அகலங்களைக் கொண்டிருக்கும். தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாயான ஆர். எஸ்.மங்களம் கண்மாயின் நீளம் 19.8 கி.மீ, அகலம் 6 கி.மீ.16 பெரிய மடைகளையும்,10 மடைகளின் பெயரில் ஊர்களையும் உடைய மிகப்பிரமாண்டமான கண்மாய்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்மாய்&oldid=3096456" இலிருந்து மீள்விக்கப்பட்டது