கண்வ குலம் (Kanva or Kanvayana Dynasty) என்பது தற்கால பிகார் மாநிலமான மகத நாட்டை ஆண்ட ஒரு பிராமண அரச குலமாகும். கண்வ குலத்தினர் கி. மு 75 முதல் கி. மு 30 முடிய 45 ஆண்டுகள் மகத நாட்டை ஆண்டனர்.

சுங்கப் பேரரசின் இறுதி அரசனான தேவபூதியை, கண்வ குலப் பிராமணன் வாசுதேவ கண்வர் கி. மு 75இல் வெற்றி கொண்டு மகத நாட்டை ஆளத்துவங்கினான்.

மகத நாட்டை நான்கு கண்வ குல அரசர்கள் ஆண்டனர். இறுதியாக கி. மு 30இல் குசானர்களிடம் ஆட்சியை பறிகொடுத்தனர்.[1]

கண்வ குல ஆட்சியாளர்கள் தொகு

  • வாசுதேவ கண்வர் கி மு 75 – 66
  • பூமிபுத்திரன் கி மு 66 – 52
  • நாராயணன் கி மு 52 – 40
  • சுசர்மன் கி மு 40 – 30

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  • Raychaudhuri, Hemchandra Political History of Ancient India, University of Calcutta, 1972.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்வ_குலம்&oldid=2308046" இலிருந்து மீள்விக்கப்பட்டது