கண் (பின்னொட்டு)

(கண், பின்னொட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கண் என்னும் சொல் சொல்லின் பின்-ஒட்டாக அமைந்து முன்னொட்டின் இருப்பிடமாய் வெவ்வேறு பொருள்களை உணர்த்துகின்றன.

  • இடுக்கண் என்பது இடர்ப்பாடு. இது சூழல் நெருக்கடியில் இடுக்குப்படுவதால் தோன்றும் மன உளைச்சல். [1]
  • இன்கண் என்பது இன்பம். இது உடலின்பம். [2]
  • உறுகண் என்பது பிறரைத் துன்புறுத்துதல் [3]
  • தறுகண் என்பது படைமுகத்து அஞ்சாமை [4]
  • புன்கண் என்பது துன்பம். இது உடல் படும் துன்பம்.
  • வன்கண் என்பது கல்நெஞ்சம். [5]

அடிக்குறிப்பு

தொகு
  1. 'இடுக்கண் அழியாமை' திருக்குறளில் வரும் ஓர் அதிகாரம்.
  2. இன்கண் உடைத்து அவர் பார்வை, பிரிவு உணர்த்தும்
    புன்கண் உடைத்தால் புணர்வு (திருக்குறள் 1152)
  3. உயிர்க்கு உறுகண் செய்யாமை மாசற்றார் கோள் (திருக்குறள் 261)
  4. பேராண்மை என்ப தறுகண் (திருக்குறள் 773)
  5. புன்கண்ணை வாழி மருள் மாலை எம் கேள் போல்
    வன்கண்ணதோ நின் துணை (திருக்குறள் 1222)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்_(பின்னொட்டு)&oldid=1555287" இலிருந்து மீள்விக்கப்பட்டது