கதிர்மருத்துவத் தொழில்நுட்பனர்
கதிர்மருத்துவத் தொழில்நுட்பனர் (radiotherapy technologist) என்பவர் கதிர் மருத்துவத் துறையில் கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவர் (Radio therapist), மருத்துவ இயற்பியலாளர் (Medical physicist) ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர் ஆவார்.
மூன்றாண்டு பட்டப் படிப்புபெற்ற இவர் கதிர்வீச்சு, கதிர் உயிரியல், கதிர்மருத்துவத் துறையில் பயன்படும் பல்வேறு கதிர்கள், அவைகளின் பண்புகள், கதிரியல் பாதுகாப்பு, நோயறி கதிரியல், மீயொலி, கணினி தளகதிர்படவியல், காந்த ஒத்ததிர்வு படவியல் (MRI ) மற்றுமுள்ள கருவிகளின் அமைப்பு, செயல்படும் முறை, நோயாளிகளை கையாளும் விதம், புற்றுநோய் பற்றிய அறிவு என துறை சார்ந்த அனைத்தும் அறிந்தவராவார். கதிர் மருத்துவத்தின் வெற்றி தோல்வியில் இவர் பங்கு பெரிது.