கதிர்வீச்சு வேதியியல்

கதிர்வீச்சு வேதியியல் (Radiation chemistry ) வேதியியலின் ஒரு பிரிவு. இப் பிரிவில் பலபொருட்களிலும் கதிர்வீச்சினால் தோன்றும் இயற்பியல் வேதியியல் விளைவுகள் ஆராயப்படுகின்றன. தொழில்துறையில் தனி அணுக்களை அணுத்திரள்களாக மாற்ற கதிர்வீச்சு உதவுகிறது. மேலும் கதிர்வீச்சிற்குட்படும் போது பலபொருட்களின் வேதியியல் நிலைத்தத் தன்மையை ஆராய்தல், பல பொருட்களையும் கதிர்வீச்சின் விளைவுகளிலிருந்து பாதுகாத்தல முதலியனவும் அடங்கும். மாறாக கதிர்வேதியியலில் (Radiochemistry) கதிரியக்கமுடைய தனிமங்களையும் கூட்டுப் பொருள்களையும் தோற்றறுவித்தல் பிரித்து எடுத்தல், தூய்மை செய்தல்,அணுப் பிளவையின் போது (atomic fission ) தோன்றும் துணைப் பொருட்களையும் பிரித்து எடுத்தல் போன்றவை கதிர்வேதியியலின் பாற்பட்ட பகுதியாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. J. W. T. Spinks. R. J. Woods: An Introduction to Radiation Chemistry, Third Edition, John-Wiley and Sons, Inc., New York, Toronto 1990. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-61403-3
  2. Turner, J.E. Atoms, Radiation, and Radiation Protection. United States: Pergamon Books Inc., Elmsford, NY, 1986. Print
  3. Bigelow, R. A. Radiation Interactions in Matter.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்வீச்சு_வேதியியல்&oldid=4164972" இலிருந்து மீள்விக்கப்பட்டது