கத்தரி நாற்றழுகல் நோய்
கத்தரி விதைகள் முளைத்து நாற்றுகள் நிலப்பரப்பிற்கு மேல் வருமுன்னரே அழுகிவிடுகின்றன.[1] விதை இலைகள் தோன்றுவதற்கு முன்னரே முளைக்குருத்தும் முளை வேரும் அழுகிவிடும். மேலும் நாற்றுகள் நிலப்பரப்பிற்கு மேல் வந்த பின்னர அழுகி மடிந்துவிடும் இது மண் மூலம் பரவுகிறது. இதை கட்டுப்படுத்த நாற்றங்காளை நல்ல வடிகால் வசதி உள்ள மேட்டுபாங்கான நிலத்தில் அமைக்க வேண்டும்.[2]
நோய்க் காரணிகள்
தொகுபித்தியம் அஃபேனிடெர்மேட்டம், பைட்டோப்தோரா பாராஸிடிகா, ரைசோக்டினியா சொலானி, ஸ்கிளிரோசியம் ரால்ப்சி நுண்கிருமகள் தாக்குவதால் இந்த நோய் ஏற்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தவேப வேளாண் இணைய தளம் :: பயிர் பாதுகாப்பு". agritech.tnau.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
- ↑ "முனைவர. ச. மோகன், வேளாண் செயல்முறைகள், தமிழ்நாடு வேளாண்மை பலகலைக்கழகம், கோவை.