கத்தி ஆட்டம்
கத்தி ஆட்டம் என்பது வீர விளையாட்டுகளுள் ஒன்றாகும். இந்த விளையாட்டு போர் பயிற்சிக்காக ஏற்படுத்தப்பட்டதாக கூறுகின்றனர். இந்த விளையாட்டு எதிரிகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.
இந்த விளையாட்டினை விளையாட எதிர் எதிராக நின்று கத்தியை எடுத்துக் கொள்கின்றனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்வர். நான்கு திசைகளிலும் ஒருவரே இரு கத்திகளை வைத்துக்கொண்டு சுழன்று ஆடுகிறார். கடைசியாக இரண்டு கத்திகளிலும் முதுகை வெட்டிக் கொள்கிறார்கள்.
தென்னம்பாளையம் முத்தையன்கோயில் பங்குனித் திருவிழாவின் போது இந்த கத்தி ஆட்டம் நடத்தப்படுகிறது.[1]
ஆதாரங்கள்
தொகு- ↑ இரா. இரமேஷ்குமார்,எம்.ஏ.,எம்.ஃபில்., பார்ச்ஸ்கல்லூரி. நூல்:- நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும் - இரா. சந்திரசேகரன். பக்கம் 55