ஆரிய அண்ணல்

(கனக விசயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கனக, விசயர் என்னும் இரு இமயச்சாரல் மன்னர்களை ஆரிய அண்ணல் என்று பதிற்றுப்பத்துப் பதிகம் குறிப்பிடுகிறது.

சேர அரசன் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை செய்யும் கல்லை ஆரிய அரசனை வென்று கொண்டுவந்தான்.[1] இமயமலையிலிருந்து சேரன் செங்குட்டுவன் கொண்டுவந்தான் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில் பொறித்தபோது தம் போன்ற மன்னர் அங்கு இல்லை என்று ஆரிய அண்ணல் கனகனும், விசயனும் தம்பட்டம் அடித்துக்கொண்டனராம். செங்குட்டுவன் அவர்களைப் போரில் வென்று கண்ணகி சிலைக்கான கல்லை அவர்கள் தலையில் சுமத்திக் கொண்டு வந்து, கங்கையாற்றில் நீராட்டி, தன் சேரநாட்டு இடும்பில்பறம் என்னுமிடத்துக்குக் கொண்டுவந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

சான்று

தொகு
  1. பதிற்றுப்பத்து பதிகம் 5
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரிய_அண்ணல்&oldid=2634134" இலிருந்து மீள்விக்கப்பட்டது