கனடாவில் உயர்கல்வி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒன்றாரியோ மாகாணத்தில்
தொகுகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உயர்கல்வி மாணவர்கள் நான்கு ஆண்டுகளில் 30 திறமைத் தேர்ச்சிகளை பெறுதல் வேண்டும். இவற்றுள் கட்டாயமானது 18. ஏனைய 12 தெரிவுசெய்யப்படக்கூடியன. கட்டயமானவை :
- 4 முதல்மொழி திறமைத்தேர்ச்சிகள் (ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு)
- 3 கணித திறமைத் தேர்ச்சிகள்
- 2 அறிவியல் திறமைத் தேர்ச்சிகள்
- 1 கனடிய வரலாறு திறமைத் தேர்ச்சி
- 1 கனடிய புவியியல் திறமைத் தேர்ச்சி
- 1 சித்திரம்/ கலை திறமைத் தேர்ச்சிகள்
- 1 உடல்நலம்/ உடற்பயிற்சி கல்வி திறமைத் தேர்ச்சி
- 1 இரண்டாம் மொழி திறமைத் தேர்ச்சி
- 0.5 தொழில் பற்றிய திறமைத் தேர்ச்சி
- 0.5 குடியியல் சார் திறமைத் தேர்ச்சி
- மூன்று திறமைத்தேர்ச்சி குழுக்களுக்குள் ஒவ்வொன்றிலும் ஒன்று.
காலை நேர (வழமையான) பள்ளிக்கூடத்தை விடவும் மாலைநேர பள்ளிக்கூடத்திலும், கோடைநேரப்பள்ளிக்கூடத்திலும், சிலவேளைகளில் தனியார் பள்ளிக்கூடத்திலும் கூட திறமைத்தேர்ச்சிகளை பெற முடியும். இவ் முப்பது திறமைத் தேர்ச்சிகளுடன்
- 40 மணிநேர தன்னார்வ தொண்டும்
- மொழித்தேர்ச்சியை புலப்படுத்தும் வகையில் அதற்கான அரசாங்கத்தால் வழங்கப்படும் தேர்வையும் எடுத்திருத்தல் தேவையானதாகும்.
படித்து முடிந்து பல்கலைக்கழக அல்லது கல்லூரிப் படிப்பை தொடர விரும்பினால் 11 ஆம் ஆண்டில் பெறப்பட்ட புள்ளிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆயினும் 12 ஆம் ஆண்டு புள்ளிகளின் அடிப்படையிலேயே பெருவாரியான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.