கனடாவில் கையுந்துபந்து

கையுந்துபந்து 1895ஆம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.இவ்விளையாட்டானது கனடாவில்1900 ஆம் ஆண்டு   முதன்முதலாக YMCA -வின் ஒட்டாவா கிளையால் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இந்த விளையாட்டானது டொராண்டோ மற்றும் மெண்ட்ரியலில் உள்ள YMCA-க்கு பரவியது. இந்த மையங்களால் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கனடாவில் மிக நீண்ட காலமாக ஒழுக்கமைவுடன் பல போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. முதல் உலகப்போருக்கு முன்பாக யுனைடெட் ஸ்டேட்ஸ்,ரஷ்யா,ஆசியா நாடுகளில் கையுந்துபந்து முழுவதும் பரவியக் கொண்டிருக்கும் பொழுது கனடாவில் கையுந்துபந்து ஆதிக்கம் சற்று அதிகமாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின் சர்வதேச கையுந்துபந்து கழகம் உருவாகியவுடன், இந்த விளையாட்டானது சர்வதேச அங்கீகாரம் பெற்றது. கனடா 1953-ல் சர்வதேச கையுந்துபந்து கழகத்தில் இணைந்த்து. அதே ஆண்டில் கனடியன் வாலிபால் சங்கம் நிறுவப்பட்டது. வெஸ்மெக்கிகார்சங்கத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்கும்முன் கோர்ட்டன்ஓடல் இடைக்கால தலைவராக பணியாற்றினார்.தற்போதைய தலைவர் டேவ் கேரே 80,000 –க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக்கொண்டஒரு நிறுவனத்தைமேற்பார்வை செய்கிறார். இச்சங்கம் கனடியன்வாலிபால் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.இச்சங்கத்தின் தலைமையகம் ஒண்டாரியோவிலுள்ள ஒட்டாவாவில் அதன் தலைமையகம் உள்ளது. இச்சங்கம் நிறுவப்பட்டபொழுது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டது. ஒட்டாவா,டொரண்டோ மற்றும் மான்ட்ரியல்.  கனடாவின் முதல் சர்வதேச சர்வதேச கையுந்துபந்து போட்டி அனுபவம் 1952ஆம் ஆண்டு சிக்காக்கோவில் நடைபெற்ற பான்-அமெரிக்கா போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் ஏற்பட்டது. இன்று கனடா அனைத்து வகை சர்வதேச போட்டிகளிலும தேர்வு பெற கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது. 1976-ஆம் ஆண்டிலிருந்து,கனடாவின் தேசிய அணியானது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தொடர்ச்சியாக கோடைகால ஒலிம்பிக் போட்டியிலும்உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பலசந்தர்ப்பங்களில் பங்கேற்றுள்ளன. லாஸ்ஏஞ்சல்ஸில் 1984ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு அணிகளிலும் சிறப்பாக பங்குபெற்று சிறந்த நிலையை அடைந்தனர்.அப்போட்டியில் ஆண்கள் அணி 4ஆம் இடமும் பெண்கள் அணி 8ஆம்இடமும் பெற முடிந்தது. 1998ஆம் ஆண்டில்,கனடியன் கைபந்து கழகம் தேசிய ஊனமுற்ற கைபந்து திட்டத்தின்குடையாக மாறியது. கனடியன்கைபந்துகழகத்தின் உதவியுடன் இன்றும் வெற்றிகரமாக இந்த்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. போலந்து நாட்டில் 2002-ஆம் ஆண்டில் உலக சாம்பியன்சிப் போட்டியில் கனடாவின் தேசிய ஊனமுற்ற ஆண்கள் கைபந்து அணி வென்றது. 2004லும் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டதுபோட்டி அனுபவம் 1952ஆம் ஆண்டு சிக்காக்கோவில் நடைபெற்ற பான்-அமெரிக்காவில் போட்டி நடைபெற்றது. இன்று கனடா அண அனைத்து வகை சர்வதேச போட்டிகளிலும தேர்வு பெற கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது. 1976-ஆம் ஆண்டிலிருந்து,கனடாவின் தேசிய அணியானது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தொடர்ச்சியாக கோடைகால ஒலிம்பிக் போட்டியிலும்உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பலசந்தர்ப்பங்களில் பங்கேற்றுள்ளன. லாஸ்ஏஞ்சல்ஸில் 1984ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு அணிகளிலும் சிறப்பாக பங்குபெற்று சிறந்த நிலையை அடைந்தனர்.அப்போட்டியில் ஆண்கள் 4ஆம் இடமும் பெண்கள், 8ஆம்இடமும் பெற முடிந்தது. 1998ஆம் ஆண்டில்,கனடியன் கையுந்துபந்து கழகம் தேசிய ஊனமுற்ற கையுந்துபந்து திட்டத்தின்குடையாக மாறியது. கனடியன் கையுந்துபந்து கழகத்தின் உதவியுடன் இன்றும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. போலந்து நாட்டில் 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்சிப் போட்டியில் கனடாவின் தேசிய ஊனமுற்ற ஆண்கள் கையுந்துபந்து அணி வென்றது. 2004லும் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டது


முக்கிய நிகழ்வுகள் கையுந்துபந்து

தொகு

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடாவில்_கையுந்துபந்து&oldid=3539787" இலிருந்து மீள்விக்கப்பட்டது