கனடிய தேயிலை விதிமுறைகள்

கனடிய சட்டம்

கனடிய தேயிலை விதிமுறைகள் (Canadian tea regulations) கனடாவிற்குள் விற்கப்படும், பதப்படுத்தப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து தேயிலை தயாரிப்புகளையும் உள்ளடக்கியதாகும். கனடாவில் தேயிலை பொருட்கள் மனித நுகர்வு தொடர்பாக கண்டிப்பாக வரையறுக்கப்பட்டுள்ளன. உலர்ந்த தியா சினென்சிசு எனப்படும் தேயிலை இலைகள் மற்றும் மொட்டுகள் மட்டுமே தேயிலை பொருட்களாக இங்கு கருதப்படுகின்றன.[1] கருப்பு தேநீர் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கருப்பு தேநீர் கலந்த கலவை என கருதப்படுகிறது. முப்பது சதவீதத்திற்கும் குறைவாக நீரில் கரையக்கூடிய உள்ளடக்கம் கொண்டதாகவும் உலர்ந்த போது 4 முதல் 7 சதவிகிதம் சாம்பல் இருக்க வேண்டும் என்றும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. கூடுதல் கருப்புத் தேநீர் விதிமுறைகள் கலப்படமற்ற தேநீருக்குப பொருந்தும். இவை 25% சதவீதத்திற்கும் குறைவாக நீரில் கரையக்கூடியதாக இருக்கவேண்டும் என்றும் உலர்ந்த நிலையின் போது 4 முதல் 7 சதவிகிதம் சாம்பல் இருக்க வேண்டும் என்றும் இங்கு விதிகள் உள்ளன. கனடாவில் விற்கப்படும் கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீருக்கும் தனித்தனி விதிமுறைகள் உள்ளன. உலர் பச்சை தேயிலை 33 சதவீதத்திற்கும் குறைவாக நீரில் கரையக்கூடிய உள்ளடக்கம் மற்றும் 4 முதல் 7 சதவிகிதம் சாம்பல் இருக்க வேண்டும் என்பது பச்சைத் தேநீருக்கான விதிமுறையாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Branch, Legislative Services (2019-06-03). "Consolidated federal laws of canada, Food and Drug Regulations". laws-lois.justice.gc.ca. பார்க்கப்பட்ட நாள் 2019-07-16.