கனிச்சீர் - தமிழ் இலக்கணம் யாப்பு
மூவசைச்சீரில் நிரை அசையை இறுதியாகக் கொண்டு முடிபவை கனிச்சீர் எனப்படும்.
கனிச்சீர்கள்
தொகுநேர்,நேர்,நிரை = தேமாங்கனி
நிரை,நேர்,நிரை = புளிமாங்கனி
நிரை,நிரை,நிரை = கருவிளங்கனி
நேர்,நிரை,நிரை = கூவிளங்கனி
பெயர்க்காரணம்.
தொகுவாய்ப்பாட்டின் இறுதியில் கனி என முடிவதால் கனிச்சீர் என்பர்.
சிறப்புப் பெயர்
தொகுஇச்சீர் வஞ்சிப்பாவுக்கு உரியதால் வஞ்சியுரிச்சீர் என்றழைப்பர்.
மேற்கோள்கள்
தொகு1.தமிழ் இலக்கணக் களஞ்சியம் - தேவிரா
2.நற்றமிழ் இலக்கணம் - அ.ஞானசம்பந்தம்
3.தொல்காப்பியம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.