கன்னிசேரி புதூர்
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கன்னிசேரி புதூர் என்பது விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூராகும். மகாலிங்க மலையில் தோன்றி வங்கக் கடலில் கலக்கும் அர்ஜுனா நதியின் கரையில் அமைந்த இக்கிராமத்திற்கு கிழக்கே ஆர் ஆர் நகரும், மேற்கே முதலிபட்டியும், வடக்கே சின்னயாபுரமும், தெற்கே அர்ஜுனா நதியும் எல்லையாக உள்ளன. இங்கு ஆடு மற்றும் மாடுகளின் விற்பனைக்கான கால்நடைச் சந்தை சிறிய அளவில் நடைபெறுகிறது.