கன்னியாகுமரி மாவட்ட இரயில்வே
1873 ல், தென்னிந்திய இரயில்வேயின் சென்னை அரசுப் பிரிவில் திருவாங்கூர் வரை இரயில் இணைப்புகளை நீடிக்க வேண்டும் என்று விரும்பினர். தலைமை பொறியாளர் திரு.பார்டன் என்பவர் கோவில்பட்டியில் இருந்து செங்கோட்டை வழியாக திருவனந்தபுரத்தை இணைக்கும் இரயில் பாதையை அமைக்க ஆலோசனை கூறினார். அதன் படி பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின் இரயில் பாதை அமைக்கப்பட்டது.1928 ஆம் ஆண்டில் நாகர்கோவிலுக்கு இரயில் இணைப்பை விரிவுபடுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தந்தை திரு. நேசமணி, இந்திய நாடாளுமன்றத்தில் மார்ச் 8, 1965 அன்று இந்த பிரச்சினையை எழுப்பினார். திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி வரை, பின்னர் திருவனந்தபுர நாகர்கோவிலுக்கு ரயில்வே இணைப்பை விரிவாக்க கோரியிருந்தார். இது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.