கன்ன பெருந்தசை

முக பாவனைகளை ஏற்படுத்தும் தசைகள்

கன்ன பெருந்தசை (zygomaticus major muscle) மனித உடலில் அமைந்துள்ள தசைகளில் ஒன்றாகும். இது முக பாவனைகளை ஏற்படுத்தும் தசைகளில் ஒன்றாக உள்ளது. இந்த தசை வாயின் இரு விளிம்புகளை மேல் புறம் மற்றும் பின்புறமாக இழுத்து சிரிப்பு எனும் முக பாவனைகளை ஏற்படுத்தும். [1] அனைத்து முக பாவனை தசைகளைப் போல இரு பக்க கன்ன பெருந்தசை 7வது இணை மண்டை நரம்பான முக நரம்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.

கன்ன பெருந்தசை
zygomaticus major
தலை, முகம் மற்றும் கழுத்து தசைகள். கன்ன பெருந்தசை சிவப்பு வண்ணத்தில்
Latinmusculus zygomaticus major
Originகண்ண எலும்பின் முன் பகுதியில்
Insertionவாயின் முக தசைகள் கோப்பு
Arteryமுக தமனி
Nerveமுக நரம்பு
Actionsவாயின் இரு விளிம்புகளை மேல் புறம் மற்றும் பின்புறம் இழுக்கிறது
TAA04.1.03.029
தசைக் குறித்த துறைச்சொற்கள்

அமைப்பு

தொகு

இரு கன்ன பெருந்தசை பக்கத்திற்கு ஒன்றாக முகத்தில் அமைந்துள்ள கன்ன எலும்பு பகுதியின் வளைவில் இருந்து வாயின் விளிம்பு வரை அமைந்துள்ளது.

வேலை

தொகு

இரு கன்ன பெருந்தசைகள் சுருங்கும் போது வாயின் விளிம்புகள் உயர்ந்து சிரிப்பு எனும் முக பாவனை ஏற்படுகிறது. ஒரு புறம் அல்லது இரு புற தசைகள் சுருங்கும் போது சில நபர்களுக்கு கன்ன குழிவு ஏற்படுகிறது.[2][3] இதற்கு காரணம் கன்ன பெருந்தசையின் தசை நார் தொகுதிகள் இரண்டாக பிளவுபட்டு இருப்பதாகும். [4]

படிமங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Stel, Mariëlle; van Dijk, Eric; Olivier, Einav (2009). "You Want to Know the Truth? Then Don't Mimic!". Psychological Science 20 (6): 694. doi:10.1111/j.1467-9280.2009.02350.x. https://archive.org/details/sim_psychological-science_2009-06_20_6/page/694. 
  2. "Dimple Creation – Cute as a button, who pays for a deformity?".
  3. "Zygomaticus Major Muscle Function, Origin & Anatomy".
  4. Pessa, Joel E.; Zadoo, Vikram P.; Garza, Peter A.; Adrian, Erle K.; Dewitt, Adriane I.; Garza, Jaime R. (1998). "Double or bifid zygomaticus major muscle: Anatomy, incidence, and clinical correlation". Clinical Anatomy 11 (5): 310–313. doi:10.1002/(SICI)1098-2353(1998)11:5<310::AID-CA3>3.0.CO;2-T. பப்மெட்:9725574. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்ன_பெருந்தசை&oldid=3682309" இலிருந்து மீள்விக்கப்பட்டது