கன்பூசியஸ்

கான்பூசியஸ் ((சீனம்: பின்யின்: Kǒng zǐவேட்-கில்சு: K'ung-tzu, or சீனம்: 孔夫子; பின்யின்: Kǒng Fūzǐ; வேட்-கில்சு: K'ung-fu-tzu), நேரடி அர்த்தமாக " காங் குரு",[1] செப்டெம்பர் 28, கிமு 551 - கிமு 479)[2][3] ஒரு சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இவருடைய உபதேசங்களும், மெய்யியலும் சீனா, கொரியா ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்தனைப் போக்குகளில் ஆழமான செல்வாக்குச் செலுத்தின. இவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித, அரச நன்னடத்தை; சமூகத் தொடர்புகள், நீதி, நேர்மை ஆகியவற்றில் சரியாக இருத்தல், ஆகியவற்றை வலியுறுத்தின. சீனாவில் ஹான் மரபினரின் காலப் பகுதியில் (கிமு 206 – கிபி 220), இச் சிந்தனைகள், தாவோயிசம் முதலிய பிற கொள்கைகளிலும் அதிக முதன்மை பெற்றிருந்தன. கான்பூசியசின் சிந்தனைகள் கான்பூசியசியம் என்னும் ஒரு மெய்யியல் முறைமையாக வளர்ச்சி பெற்றது.

孔丘 கொங் கியு
காலம்பண்டைக்கால மெய்யியல்
பகுதிசீன மெய்யியல்
பள்ளிகன்பூசிஸியத்தின் நிறுவனர்
முக்கிய ஆர்வங்கள்
நன்னெறி மெய்யியல், சமூக மெய்யியல், ஒழுக்கம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
கான்பூசியசியம்
செல்வாக்குச் செலுத்தியோர்
  • Zhou Dynasty
செல்வாக்குக்கு உட்பட்டோர்

அவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித மற்றும் அரசாங்க நன்னெறி, சமூக ஒழுக்கம், நடுநிலை மற்றும் குறிக்கோள்களைப் பற்றியதாக இருந்தன. இவ்விழுமியங்கள் ஹான் வம்ச[4][5][6] (கிமு 206 – கிபி 220) கால சீனாவில் ஏனைய சித்தாதங்களான சட்டக்கோட்பாடுகள், அல்லது டாவோ மதத்தைவிட(道家) பெருமதிப்பு பெற்றதாக இருந்தன. கன்ஃபூஷியஸின் சிந்தனைகள் கன்ஃபூஷியஸ் மதம் (儒家) என்று முழு வளர்ச்சியடையும் அளவுக்கு தத்துவ ஆழம் கொண்டதாக அமைந்தது. இத்தாலியர்களினால் இது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேட்டியோ ரிக்கி, முதன்முதலில் 'கன்ஃபூஷியஸ்' என்று இதை லத்தீனாக்கம் செய்து அறிமுகப்படுத்தினார். உலகின் முதலாவது ஆசிரியர் கன்பூசியஸ்.

பிறப்பு

தொகு

சீனாவில் பல ராஜாக்கள் இருந்தனர்.அவர்கள் பதவி ஆசையில் மக்களையே துன்புறுத்தினர்.மொத்தத்தில் மக்களைக் காப்பாற்ற வேண்டிய மன்னர்களே மக்களை வதைத்தனர்.ஹன்பூஸியஸ் பிறப்பதற்கு சில நாட்கள் முன்பு ஒரு பெரிய அதிசயம் நடந்தததாக சீன மக்கள் நம்பினர்.அதாவது 'சி லின்'என்ற ஒற்றைக் கொம்புக்குதிரை(unicorn) திடீரென்று தோன்றி ஒரு முக்கியமான செய்தியை அறிவித்ததாம்: "பளிங்கு போல் துய்மையான ஒரு குழந்தை இங்கே பிறக்கப்போகிறது. அந்தக் குழந்தை எந்நாட்டையும் ஆட்சி செய்யாத ஓர் அரசனாகத் திகழும்". சி லின் குதிரை தோன்றி சிறிது காலத்துக்குப் பின்னர் அது சொன்ன செய்தி நிஜமாகிவிட்டது. சீனாவின் லூ மாநிலத்தைச் சேர்ந்த ட்சவ் என்ற சிறு நகரத்தில் அந்த அற்புதக்ககுழந்தை கி.மு 551 ஆம் வருடம் செப்டம்பர் 28 பிறந்தது.இக்குழந்தையின் தந்தை பெயர் ஷ லியாங் ஹி.தாயின் பெயர் ஜென் சென் ட்சாய்.இவர்களுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் குங் சியு என்று பெயர் சூட்டினார்கள்.பிற்காலத்தில் அவரது சீடர்கள் குங்க்புட்சு என்று கூப்பிட்டனர்.அதன் அர்த்தம் குருநாதர் குங் என்பதாகும்.இதையே மேலைத்தேயர்கள் ஹன்பூசியஸ் என்றனர்.

குடும்பசுழல்

தொகு

ஹன்பூசியசஸின் தந்தை ஷ லியாங் ஹி முதலில் சிறந்த வீரராகவும் பின் நீதிபதியாகவும் பின் கிராமத்து ஆட்சித் தலைவராகவும் செயற்பட்டார். ஹன்பூசியஸ் பிறந்தபோதே தந்தைக்கு மிகவும் வயதாகி விட்டது. ஹன்பூசியசிக்கு மூன்று வயது உள்ளபோதே தந்தை இறந்துவிட்டார். ஹன்பூசியசிக்கு பின் படிப்பின்மீது ஆர்வம் வந்தது.புத்தகங்கள் அனைத்தையும் தேடித்தேடிப் படித்தார். இருப்பினும் இவர் சிறுவயதிலேயே வேலைக்குச் சென்றார். இவருக்கு முதலில் ஆடு, மாடு மேய்க்கும் தொழிலும் பின் உள்ளுர்ப் பூங்காக்களைக் கவனித்தல், பின் தானியக் களஞ்சியத்தைப் பாதுகாத்தல் என்று வேலைகள் கொடுக்கப்பட்டன. இந்த நேரத்தில் தான் ஹன்பூசியஸ்க்கு திருமணம் சீகுவான் என்ற பெண்ணுடன் நடைபெற்றது. அடுத்த ஒரு வருடத்திலேயே குங் லீ என்ற மகனும் பிறந்தான்.

தத்துவவியல்

தொகு

இவருடைய தத்துவங்கள் கன்பூசியஸம் என அழைக்கப்படுகிறது. இவருடைய தத்துவங்கள் சீனர்கள் தங்களுடைய மத கோட்பாடுகளாகவே பாவித்து பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இவருடைய தத்துவங்களின் கோட்பாடுகள் மற்றும் விளக்கங்கள் மதசார்பற்றதாக உள்ளதாக கூறினர். ஆனால் இவருடைய ஆதரவாளர்கள் அந்த கொள்கை தான் கன்பூசிஸத்தின் வெற்றியாக கருதுகின்றனர். ஏனெனில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே தத்துவம் என்பது பொருந்தாது என்றும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் மதம் என்பது உலகம் முழுமைக்கும் சமம் எனவும் தெரிவித்தனர். கன்பூசியனிஸம் மக்களின் இறப்பிற்குப் பிறகான சொர்க்க வாழ்க்கைபற்றி எடுத்துரைக்கிறது. ஆனால் இது சில சமயக் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது (முக்கியமாக 'ஆன்மா' போன்றவற்றிற்கு). கன்பூசியஸிற்கு ஜோதிடத்தின் மேல் அதிகமான நம்பிக்கை உண்டு. கடவுள் நன்மை மற்றும் தீமை போன்ற இரண்டையுமே மக்களுக்கு தருகிறார் நல்ல மனிதர்கள் சரியானதை தேர்வு செய்வர். போன்ற இவருடைய தத்துவங்கள், சுய பகுப்பாய்வு, ஒழுக்கசீலர்களைப் பின்பற்றுதல், தீர ஆராய்ந்து முடிவு செய்தல் போன்றவற்றை எடுத்துரைத்தது.

நீதிநெறி

தொகு

இவருடைய தத்துவங்கள் பெரும்பாலும் தனிமனித ஒழுக்கம் மற்றும் மேன்மையை பற்றியே எடுத்துரைத்தது. இவருடைய நீதிவிளக்கங்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிகளை அடிப்படையாக கொண்டது. அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று.

廄焚。子退朝,曰:“傷人乎?” 不問馬。

ஒரு நாள் குதிரை கொட்டைகையில் பயங்கர தீ விபத்து ஒன்று நிகழ்ந்தது. அந்த வழக்கு இவரிடம் வந்தது உடனே அவர் கேட்ட கேள்வி மனிதர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டதா? அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் இவர் குதிரைகளைப் பற்றி கேட்கவில்லை என்று குழம்பினர். பின்னர் அவரே இதற்கான விளக்கத்தை கூறினார். மனிதன் தான் இருக்கின்ற உயிரினங்களிலேயே மிகவும் பெரியவன் என கூறினார்.

己所不欲,勿施於人。

உங்களுக்கு எது விருப்பமில்லையோ அதனை நீங்கள் மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம்.

அரசியல்

தொகு

கன்பூசியஸின் அரசியல் கோட்பாடுகல் அவரின் நன்னெறி விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டதே. இவரின் கருத்துப்படி ஒரு உண்மையான அரசாங்கம் என்பது மக்களை நீதிவழிகளில் நடைபெறக்கூடியதாக இருக்க வேண்டும் மாறாக, அவர்களிடம் ல்ஞ்சம் பெற்றோ அல்லது அவர்களை கட்டாயப்படுதியோ ஆட்சி செய்யக்கூடாது என்று கூறுகிறார். மேலும் மக்கள் சட்டங்கள் மூலம் வழிநடத்தப்பட்டால் அவர்களுக்கு தண்டனைகள் கிடைக்கும். ஆனால் அவர்கள் அதனை அவமானமாக கருத மாட்டார்கள். ஆனால் அதே மக்களை நீதிநெறியால் வழிநடத்தினால் மக்கள் தண்டனைகளை அவமானமாக கருதுவதோடு மற்றுமின்றி நல்வழியிலும் செல்வர்.

சீடர்கள்

தொகு

இவருடைய சீடர்கள் பெரும்பாலனவர்களை அறிய இயலவில்லை. மேலும் சிலர் புனைப்பெயர்களில் சுயோ சுஹான்(Zuo Zhuan) என்பதில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். அன்லிஸ்ட் பதிவானது மொத்தம் 22 சீடர்கள் உள்ளதாக தகவல் கூறுகிறது. ஆனால் மென்சியஸ் பதிவானது மொத்தம் 24 சீடர்கள் உள்ளதாகவும் மேலும் பல சீடர்களின் பெயர்களைப் பதிவு செய்யவில்லை எனவும் கூறுகின்றனர். இவருடைய பெரும்பாலான சீடர்கள் லூ நாகரத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் மற்றவர்கள் அதன் அருகிலுள்ள நகரங்களிலிருந்து வந்தவர்கள் எனவும் கூறுகின்றனர். உதாரணமாக (ஸிகோங் Zigong_) என்பவர் வே மநிலத்தில் (Wey state) இருந்து வந்தவர் ஆவார்.

வாழ்க்கை

தொகு

இச்சமயத்தில்தான் கன்பூசியசும் யோசித்து மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று இருபத்திரண்டு வயதிலேயே பள்ளியில் மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மற்றவர்களிடம் எப்படிப் பழக வேண்டும், எது நல்லது, எது கெட்டது, கல்வியின் முக்கியத்துவம், கடவுள் வழிபாடு, சட்டம், அரசியல், ஆட்சிமுறை என்று சொல்லிக் கொடுத்தார். இவற்றைத் தொகுத்து பின் நூலாக்கினார். ஹன்பூசியசிடம் கிட்டத்தட்ட 3000 சீடர்கள் படித்தனர். லூ மாநிலத்து மன்னன் மக்களுக்கு நல்லது செய்ய விடவில்லை என்பதால் முப்பத்து ஐந்து வயதில் பக்கத்துக்கு மாநிலமான சி க்குச் சென்றார். ஹன்பூசியசின் நற்பாடத்தை சீடர்கள் மட்டுமே கேட்டனர். அது மக்களுக்குச் செல்லவில்லை. இதனால் கன்பூசியஸ் தனது நாற்பத்து மூன்றாம் வயதில் லூ மாநிலத்திற்குச் சென்று தான் படிப்பித்தவற்றை நூலாக எழுதினார். அவ்வகையில் இவர் எழுதிய நூல்களாவன:

  1. எழுச்சிப் பாடல் நூல்
  2. நூல்
  3. மாற்றம் பற்றிய நூல்
  4. சடங்கு முறை நூல்
  5. இசைத் தொகுப்பு நூல்
  6. இளவேனிலும் இலையுதிர் காலமும்.

இவரின் ஐம்பத்தோராம் வயதில் அரசாங்கப்பதவி கிடைத்தது சுங் து நகரின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின் இவர் நன்றாகச் செயற்பட்டதால் பொதுப்பணித்துறை அதிகாரியாகவும் பின் லூ மாநிலத்தின் நீதித்துறை தலைமை அதிகாரியாகவும் பொறுப்பேற்றார். பின் அரசனின் கெட்ட பழக்கம் காரணமாக 13 வருடங்கள் அலைந்து திரிந்து ஒருவழியாக சீடர்களின் சொற்படி கி.மு 484 ஆம் ஆண்டு தனது சொந்த மாநிலமான லூ வுக்கே வந்து சேர்ந்தார். 3௦௦௦ மாணவர்களுள் 72 பேரே இவரின் போதனைகளை உலகிற்குப் பரப்பியவர்கள்.

இறப்பு
தொகு
 
Cemetery of Confucius, Qufu, Kina

கி.மு.479 ஆம் ஆண்டில் தனது எழுபத்திரண்டாவது வயதில் ஹன்பூசியஸ் மரணமடைந்தார். தனது மரணம் அணிமித்தது தாங்காமல் தவித்த சீடர்களுக்குச் சொன்ன சத்தியவாசகம் இதுதான்: "நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்". சு பு ன்ற இடத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட்டார். இதைச் சுற்றி சீடர்களால் வைக்கப்பட்ட மரங்கள் தற்போது குங் காடாக மாறியுள்ளது. கன்பூசியசின் கொள்கைகளே கன்பூசியம் எனும் பெயரில் பின்பற்றப்படுகின்றன. உண்மையில் இது ஒரு வாழ்க்கைமுறை. 1. நல்ல பண்புகள்.

  • நல்லதைச் செய்ய என்று மனதுக்குள் ஆசைப்பட்டலே போதும் உங்களுடைய கெட்ட குணங்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும்.
  • நல்லதைச் செய்வதற்குத்தேவை நிறைய மனஉறுதி.
  • நீங்கள் எப்போதும் நல்ல வழியிலேயே நடக்க வேண்டும்.
  • நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
  • உயர்ந்த குணங்களைப் பின்பற்றவேண்டும்.
  • கலைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
  • நல்ல பண்புள்ளவர்களுக்கு நடுவேதான் நாம் எப்போதும் வாழவேண்டும். மற்ற எதுவும் வாழ்க்கையே இல்லை.

2. நல்லவர்கள் எப்படி இருப்பார்கள்

  • அவர்களுடைய பேச்சில் புத்திசாலித்தனம் இருப்பார். சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள்.
  • ஆர்வத்துடன் உழைப்பார்கள்.
  • சோம்பலாக இருக்கமாட்டார்கள்.
  • பெரியவர்களை மதித்து நடப்பார்கள்.
  • புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்பார்கள்.
  • அன்போடு பழகுவார்கள்.
  • நிலைமாறாமல் இருப்பார்கள்.
  • தங்களைப்பர்றிப் பெருமையடிக்க மாட்டார்கள்.
  • ஜாதி,மதம்,மொழி என்றெல்லாம் வேறுபாடு பார்க்கமாட்டார்கள்.
  • அனைவரையும் அரவணைப்பார்கள்.
  • எல்லோரிடமும் சமமாகப் பழகுவர்.
  • தர்மத்தின் பாதையில் நடப்பார்கள்.
  • சட்டத்தை மதிக்கிறார்கள்.
  • சுதந்திரமாக வாழ்வார்கள்.
  • பொறாமைப்பட மாட்டார்கள்.

3. நல்ல குணம் கிடைப்பதற்கு ஐந்து குணங்கள்

  • பணிவன்பு
  • சகித்துக்கொள்ளும் தன்மை
  • சக மனிதர்கள் மீது நம்பிக்கை
  • விடாமுயற்சி
  • கருணை

4. மென்மையான குணங்கள் எவை?

  • மனஉறுதி
  • விடாமுயற்சி
  • மென்மையாகப் பேசுவது

5. கெட்ட குணங்கள்

  • பாசாங்கு செய்தல்
  • கோபப்படுவார்கள்.
  • சண்டை செய்வார்கள்.
  • வதந்திகளை பரப்புவார்கள்.

6. படிப்பு

  • சிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண்
  • படிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்
  • உண்மையான அறிவு நமக்குத் தெரிந்தததை தெரியும் எனவும் தெரியாததை தெரியாது எனவும் ஏற்றுக்கொள்வது.
  • நல்ல குணமுள்ள கல்வியாளனாக இருக்கவேண்டும்.
  • ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாகவும்,அகலமாகவும் படித்தால் போதாது.படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் இருக்கவேண்டும்.

7. தலைவர்

  • பதவிக்கு மரியாதை கொடுப்பார்.
  • நம்பிக்கைக்குரியவர்.
  • உயிரைத் துச்சமாக மதிப்பர்.
  • நல்ல ஆட்சிக்கு போதுமான உணவு,ராணுவம்,மக்களின் நம்பிக்கை ஆகியவை தேவை.
  • நல்ல விஷயங்களை பின்பற்றுவார்கள்.
  • அமைதியாக இருப்பார்கள்.
  1. கடவுள்,கோயில்,சடங்குகள்
  • கடவுளை கும்பிடும் போது அடக்கம் வேண்டும்.
  • பெற்றோரின் தேவையறிந்து உதவிகள் செய்தல்.

8. வெறும் சில

  • கெட்டதை எண்ணாதே
  • நேர்மையின் வழியில் நட
  • தன்னடக்கத்துடன் இரு
  • மனஉறுதியுடன் இரு
  • கண்ட நேரத்தில் சாப்பிடாதே
  • வயிறு நிறையச் சாப்பிடாதே.
  • மற்றவர்களின் பொருள்மீது ஆசைபடாதே
  • எளிமையாக இரு
  • தவறு செய்தவர்களை மன்னித்திடு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்பூசியஸ்&oldid=3802550" இலிருந்து மீள்விக்கப்பட்டது