கபர்து மக்கள்
கபர்து மக்கள், வடக்குக் காக்கேசஸ் பகுதியில் வாழும் மக்கள் இனத்தோராவர். இவர்கள் தமது இனத்தின் பன்மைப் பெயரான கபார்தீன் என்பதால் பெரும்பாலும் அறியப்படுகிறார்கள். தொடக்கத்தில் அடிகே பழங்குடியின் அரை-நாடோடிக் கிழக்குப் பிரிவினராக இருந்தனர். இவர்கள் இப்போதும் தங்களை அடிகே பழங்குடியினராகவே கருதிவருகின்றனர். 2002 ஆம் ஆண்டுக் கணக்குப்படி ரஷ்யாவில் இவர்களுடைய மக்கள்தொகை சுமார் 520,000 ஆகும். துருக்கி, ஜோர்ஜியா ஆகிய நாடுகளிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இவ்வினத்தவர் வாழ்ந்து வருகின்றனர்.[1][2][3]
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(600,000 (மதிப்பீடு)) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
ரஷ்யா ( குறிப்பாக கபர்டானோ-பல்கரியாவில்), துருக்கி, ஜோர்ஜியா | |
மொழி(கள்) | |
கபர்திய மொழி, ரஷ்ய மொழி, | |
சமயங்கள் | |
சுன்னி இஸ்லாம், Eastern Orthodoxy | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
அடிகே, வேறு "சிர்க்கேசிய" மக்கள் |
பெரும்பாலான கபர்துக்கள், சுன்னி முஸ்லிம்கள் ஆவர். எனினும், வட ஒசெட்டியாவின் மொஸ்டொக் மாவட்டத்தில் வாழும் கபர்துக்கள், பழமைவாத கிறிஸ்தவர்களாவர். இவர்கள், காக்கேசிய மொழிக்குடும்பத்தின், கிழக்கு எல்லையில் உள்ள வடமேற்குக் காக்கேசிய மொழிக்குழுவைச் சேர்ந்த கபர்திய மொழியைப் பேசுகிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kabardian: A Language of the Russian Federation". Etnologue.com. Ethnologue: Languages of the World. 2005. Archived from the original on 26 January 2017. பார்க்கப்பட்ட நாள் 5 December 2016.
- ↑ Skutsch, Carl (2013). Encyclopedia of the World's Minorities. Routledge. p. 675. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-19388-1.
- ↑ "'Biz' Erozyona Uğratıldı". Jineps. March 2012. http://www.jinepsgazetesi.com/yazdir.php?detay=12275. பார்த்த நாள்: 5 December 2016.