கபாடபுரம்
இடைச்சங்க தலைநகரம்
கபாடபுரம் என்பது பாண்டியர்களின் இடைச்சங்ககால தலைநகரம் என்று கருதப்படும் நகரமாகும்.
அகப்பொருள்
தொகுமூலக்கட்டுரை - சங்கம்-முச்சங்கம்[1]
இறையனார் அகப்பொருளில் பின்வரும் குறிப்புகள் படி கபாடபுரத்தில் சங்கம் அரங்கேறியதாக கூறப்படுகிறது.
குறிப்பு | இடைச்சங்கம் |
---|---|
சங்கம் இருந்த இடம் | கபாடபுரம் |
சங்கம் நிலவிய ஆண்டுகள் | 3700 (37 பெருக்கல் 100) |
சங்கத்தில் இருந்த புலவர்கள் | அகத்தியனார், தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோமான், கீரந்தை இத் தொடக்கத்தார் |
புலவர்களின் எண்ணிக்கை | 3700 |
பாடிய புலவர்களின் எண்ணிக்கை | 59 |
பாடப்பட்ட நூல்கள் | கலி, குருகு, வெண்டாளி, வியாழமாரை அகவல் இத்தொடக்கத்தன |
சங்கம் பேணிய அரசர்கள் | வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திரு மாறன் வரை |
சங்கம் பேணிய அரசர்களின் எண்ணிக்கை | 59 |
கவியரங்கு ஏறிய புலவர் எண்ணிக்கை | 5 |
அவர்கள் பயன்படுத்திய இலக்கண நூல் | அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசைநுணுக்கம், பூதபுராணம் |
இராமாயணத்தில் கபாடபுரம்
தொகுசீதையை நோக்கி தென்திசையை தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம் சுக்கிரீவன் பின்வருமாறு கூறுகிறான்.
“ | நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும் போது தங்கம், முத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட ஒரு நகரத்தை காண்பீர்கள் அந்த பேரரசான பாண்டியனின் கபாடபுரத்திலும் சீதையை தேடிப்பாருங்கள்! | ” |
— இராமாயணம், கிசுகிந்தாகாண்டம்(4.41.18) |