கபாலம் (ஒலிப்பு) என்பது சிவபெருமான் வேடம் பூண்டு ஆடப்படும் ஆட்டங்களில் ஒன்று.

கபாலம் என்பது மண்டை ஓடு. புலித்தோலை இடையில் கட்டிக்கொண்டு, தலையில் சூடிய கொன்றைமலர் தோளில் அசைந்தாட கையில் மண்டை ஓட்டை ஏந்திக்கொண்டு சிவபெருமான் (வீடுதோறும் பிச்சை எடுத்து) ஆடினாராம். இப்படிப்பட்ட ஆட்டத்தை அரங்கில் ஆடிக் காட்டுவது ‘கபாலம்’ என்னும் ஆட்டமாகும். [1]

அடிக்குறிப்பு

தொகு
  1. கொலை உழுவைத் தோல் அசைஇ கொன்றைத்தார் சுவல் புரளத்
    தலை அங்கைக் கொண்டு நீ கபாலம் ஆடுங்கால்
    முலை அணிந்த முருவலாள் முன் பாணி தருவாளோ – கலித்தொகை கடவுள் வாழ்த்து.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபாலம்&oldid=2553640" இலிருந்து மீள்விக்கப்பட்டது