கபாலீசுவரி கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஸ்ரீ கபாலீஸ்வரி திருக்கோயில் - மாராந்தூர்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுக்கா மதுராந்தக நல்லூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரி அம்மன் வீற்றியிருக்கும் கோயில் இப்பகுதியில், அமைந்துள்ளது.
ஸ்ரீ கபாலீஸ்வரி திருக்கோயிலில் கி.பி.1967 முதல் கடந்த 51 ஆண்டுகளுக்கும் மேலாக தினசரி பூஜைகள் நடந்து வருகின்றது.
இந்த கோயிலில் பிரதி மாதம் அமாவாசை அன்று பகல் பொழுதில் நிகம்பலா யாகம் (மிளகாய் யாகம்) நடைபெறும். இந்நிகழ்வில் ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதால், உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது, வெளி மாநில மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் (NRI) மேலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை புரிகின்றனர்.