கபிலப் புள்ளி நோய்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கபிலப் புள்ளி நோய் | |
---|---|
Symptoms of Cochliobolus miyabeanus on rice | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. miyabeanus
|
இருசொற் பெயரீடு | |
Cochliobolus miyabeanus |
கபிலப் புள்ளி நோய்(Brown spot disease) எனப்படுவது நெல்லின் எல்லா வளர்ச்சிப் படிநிலைகளிலும் தாக்கும் ஒரு நோய் ஆகும். நோய்காரணி கொக்கிலியோபோறசு மியாபீனசு (Cochlioborus miyabeanus) எனும் பூஞ்சணம்.
நோய்த்தாக்கம்
தொகுநாற்றுமேடையில் நாற்றுக்கள் கருகுதல். ஆரம்பநிலையில் இலை மற்றும் இலை மடல்களில் நீள்வட்ட வடிவிலான புள்ளிகள் காணப்படும். தனித்தினியாகக் காணப்படும் இப்புள்ளிகள் நோய் முற்றிய நிலையில் ஒன்றிணைந்து அழிந்த இழையங்களாக மாறும். புள்ளிகள் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும்.
நோய் பரவும் முறை
தொகு- பாதிக்கப்பட்ட விதைகளை விதைப்பதன் மூலம்.
- காற்று மூலம்
- களைகளின் மூலம் பரவுதல்
கட்டுப்பாட்டு முறை
தொகு- நோயற்ற பயிரிலிருந்து விதை தெரிதல்.
- வயல் மற்றும் வரப்பிலுள்ள களைகளை அகற்றுதல்.
- நோய் எதிர்ப்பு திறனுள்ள வருக்கங்களைப் பயிரிடல்.
- பரிந்துரைக்கப்பட்ட இரசாயனங்கள் பாவித்தல்.
- சூடோமோனசுத் தூள் 10 கிராம் ஒரு கிலோகிராம் விதைக்கு 400 மில்லி லீட்டர் நீரில் கலந்து
- திராம் அல்லது கப்டான் 2 கிராம் அளவு ஒரு கிலோகிராம் கொண்டு வித்துப் பரிகாரம் செய்தல்
- எடிபேன்பாசு 500 மி.லீ அல்லது மென்கோசெப் தெளித்தல்