கபிலர் (இன்னா நாற்பது பாடியவர்)

இன்னா நாற்பது பாடியவர்

இன்னாநாற்பது பாடிய கபிலர் சங்க காலக் கபிலருக்கு இரண்டொரு நூற்றாண்டு பிற்பட்டவர். பாடலை இவர் ‘கவி’ எனக் குறிப்பிடுவது [1] ஒன்றே இவரது காலம் பிற்பட்டது என்பதைக் காட்டப் போதுமானது.

இந்த நூலிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல் முக்கண்ணான், பனைக்கொடியான், சக்கரத்தான், சத்தியான் (வேலாயுதம்) ஆகியோரைக் குறிப்பிடுகிறது.

இன்னா என்பது துன்பம். ஒவ்வொரு பாடலிலும் துன்பம் தரும் பொருள்கள் நான்கு அடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் சில பாடல் எண்ணுடன் இங்கு தரப்பட்டுள்ளன.

அன்பில்லா மனைவி வனப்பு, 1
அந்தணர் வீட்டில் உண்ணுதல், 1
மந்திரம் பலிக்காவிட்டால், 1
பார்ப்பார் இல்லத்தில் கோழி, நாய் வளர்தல், 2
மனைவி அடங்காமை, 2
அரசன் கொடுங்கோல், 3
புணை இன்றி நீந்துதல், 3
எருதில்லா உழவர்க்கு ஈரம் போதல், 4
திருவுடையாளரைச் செறுதல், 4
கூரை மழையில் ஒழுகல், 5
துன்புறுவோர் கொடை வழங்குதல், 6
நாற்றம் இல்லாத மலரின் அழகு, 7
தெளிவில்லாதவன் துணிவு, 7
வலிமை இல்லாதவர்களுக்கு வனப்பு,9
நயம் இல் மனத்தவர் நட்பு, 8
பொருள் உணராதவரிடம் பாடுதல், 10

உடம்பாடு இல்லாத மனைவி தோள், 11
முலை இல்லாள் பெண்மை விழைவு, 12
மணி கட்டாமல் வேந்தன் யானைமேல் வரல், 13
மகளிர் வஞ்சித்தல், 14
பனம்பழ நாரைச் சுவைத்தல், 14
கல்லார் உரைக்கும் கருமப் பொருள், 15
கண்ணில்லாவனுக்கு வனப்பு, 16
ஈன்றாளை ஓம்பா விடல், 17
வலிமை உடையவனின் சோம்பல், 18
நற்குடியில் பிறந்தவர் கல்லாமை, 19
மூரி (கிழட்டு) எருது பூட்டி உழுதல், 20
மூப்பில் பிணி, 21
ஓதாத பார்ப்பான், 21
ஊனைத் தின்று ஊனைப் பெருகல், 22
ஆற்றுத் துறையில் ஆடை கழுவுதல், 23
யாம் என்பவரோடு தொடர்பு, 24

விரும்பிச் சூது ஆடுதல், 25
பெரியார்க்குத் தீங்கு செய்தல் 26
கிழமை உடையாரைத் தாழ்த்துதல், 27
கல்லாதான் கோட்டி (அவை) கொளல், 28
குறி அறியாதவன் பாம்பாட்டல், 29
கடும்புலி வாழும் காட்டுவழி, 30
பண் அமையா யாழிசை, 31
தன்னைத் தான் போற்றாது ஒழுகல், 32
கள்ளுண்பார் அறிவுரை, 33
விரும்பாதவரிடம் உள்ள விழுமிய நூல், 34
குழந்தைக்கு உற்ற பிணி, 35
கெடுமிடத்தில் கைவிடுவார் நட்பு, 36
சிறியார் மேல் சினம் கொள்ளல், 37
பிறன் மனையாளை நோக்குதல், 38
வெறுங்குதிரை மேல் ஏறல், 38
கொடை பெறாத கவி, 39
அடைக்கலம் வௌவுதல், 40

அடிக்குறிப்பு

தொகு
  1. பாடல் 39