கபிலர் (திருவள்ளுவமாலைப் பாடல்)
கபிலர் என்னும் பெயரில் பல்வேறு காலவகளிங் பல்வேறு புலவர்கள் வாழ்ந்துவந்தனர். அவர்களில் திருவள்ளுவமாலை நூலில் குறிப்பிடப்படும் பாடலைப் பாடிய புலவர் ஒருவர். திருக்குறளின் பெருமைகளைப் போற்றிப் பிற்காலத்தில் சில பாடல்கள் எழுதப்பட்டன. அவற்றையெல்லாம் தொகுத்துத் 'திருவள்ளுவமாலை' என்னும் பெயரில் திருக்குறளின் இணைப்பாகச் சேர்த்து வெளியிட்டுள்ளனர். திருவள்ளுவமாலை நூலின் காலம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு. அத் தொகுப்பில் கபிலர் பாடியதாகப் பாடல் ஒன்று வருகிறது.
- பாடல்
தினையளவு போதாச் சிறுபுன் னீர்நீண்ட
பனையளவு காட்டும் படிததான்- மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி [1]
- விளக்கம்
திருக்குறள் பனித்துளி போல் சிறியதாயினும், அதில் அடங்கியுள்ள பொருள் பனித்துளிக்குள்ளே நிழலாக அடங்கித் தெரியும் மிகப் பெரிய பனைமரம் போன்றது என்று இந்தப் பாடல் தெரிவிக்கிறது.
மேற்கோள் குறிப்பு
தொகு- ↑ திருவள்ளுவமாலை பாடல் 5