கபில ஆசிரமம்

மிதிலைப் பிராந்தியத்தில் அமைந்திருந்த ஒரு குருகுலம்

வார்ப்புரு:Monastery கபில ஆசிரமம் (Kapil Ashram) என்பது வேதகால மகரிசிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவரான கபிலரின் ஆசிரமமாகும். கபிலர் பண்டைய இந்திய தத்துவத்தின் சாங்கியத்தின் ஆசிரியர் ஆவார். இது பிகாரின் மிதிலைப் பகுதியின் மதுபனி மாவட்டத்திலுள்ள ரஹிகா தொகுதியின் கக்ரால் கிராமத்தில் அமைந்துள்ளது.[1][2]

பின்னணி

தொகு

புராணத்தின் படி கபிலர், கர்தம முனிவரும் அவரது மனைவி தேவகுதிக்கும் பிறந்த மகனாவார்.[3] கபிலர் சிவனின் பக்தர் என்று நம்பப்படுகிறது. பிகாரின் கக்ரால் கிராமத்தில் கபிலேசுவர் கோயில் ஒன்றை சிவனுக்காக நிறுவினார். அங்கு கபிலரின் ஆசிரமம் ஒன்று இங்கு இருந்தது. அங்குதான் கபிலர் இந்திய தத்துவமான சாங்கியத்தை உருவாக்கி எழுதினார். மேலும், தனது சாங்கிய சாத்திரத்தை தனது சீடர்களுக்கு பல ஆண்டுகள் கற்பித்தார். மிதிலையின் மன்னரான சனகரும் கபிலரிடமிருந்து சாங்கிய சாத்திரத்தைப் படிக்க இங்கு வந்தார்.[4][5] மிதிலை பிராந்தியத்தில் உள்ள இந்து யாத்ரீகர்களுக்கு இது ஒரு சுற்றுலா இடமாக திகழ்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், முழு மிதிலாவிலிருந்தும் இந்து பக்தர்கள் இங்கு வந்து கபிலேசுவர் கோயிலின் சிவலிங்கத்தை வழிபடுகிறார்கள்.[6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. "बाबा कपिलेश्वर स्थान में बिखरने लगी मधुबनी पेंटिग की छटा". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
  2. Singh, Shankar Dayal. Bihar : Ek Sanstkritik Vaibhav (in இந்தி). Diamond Pocket Books (P) Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7182-294-2.
  3. Jha, Bhavanath. धर्मायण, 2078 वि.सं. भाग-1, अंक 105-108 (in இந்தி). Mahavir Mandir, Patna.
  4. Nirmalendu, Kumar (2019-10-23). Magadhnama (in ஆங்கிலம்). Lokbharti Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-88211-61-1.
  5. Chaudhary P. C. Roy (1964). Bihar District Gazetteers Darbhanga.
  6. "Mithila Heritage - Places". www.mithilaheritage.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
  7. "About District | District Madhubani, Government Of Bihar | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபில_ஆசிரமம்&oldid=4128849" இலிருந்து மீள்விக்கப்பட்டது