கமலாகர் திரிபாதி
கமலாகர் திரிபாதி (Kamalakar Tripathi) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஆவார். மேற்கு வங்க மாநிலத்தின் மதன்பூர் நகரத்தில் இவர் பிறந்தார். பனாரசு இந்து பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.[1][2] அங்கு சிறுநீரகவியல் துறையின் தலைவராகவும் இருந்துள்ளார். தற்போது வாரணாசியின் இரவீந்திரபுரி விரிவாக்கப் பகுதியில் வசிக்கிறார்.[3]
கமலாகர் திரிபாதி Kamalakar Tripathi | |
---|---|
பிறப்பு | மதன்பூர் |
தேசியம் | இந்தியர் |
பணி | மருத்துவர் |
அறியப்படுவது | நோயாளிகளுக்கு இலவச ஆலோசனை வழங்குதல் |
விருதுகள் | பத்மசிறீ |
1998 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை பனாரசு இந்து பல்கலைக்கழகப் பொது மருத்துவத் துறையின் தலைவராகவும், 2008 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இந்திய உயர் இரத்த அழுத்த சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பனாரசு இந்து பல்கலைக்கழக நிறுவனத்தின் கல்வித்தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.[3]
2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை உத்தரப்பிரதேச நீரிழிவு சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். 2 பன்னாட்டு மற்றும் 15 தேசிய விருதுகளை திரிபாதி பெற்றுள்ளார்.[4]
மருத்துவத் துறையில் திரிபாதி ஆற்றிய பங்களிப்பிற்காக, 2022 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது .[5][6]
கமலாகர் திரிபாதி கடந்த பல ஆண்டுகளாக நோயாளிகளுக்கு இலவசமாக சேவை செய்து வருகிறார். தினமும் 100 முதல் 150 நோயாளிகளுக்கு இலவச ஆலோசனைகள் வழங்குகிறார்.[7][8][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "SSU fetes three Padma awardees from Varanasi". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 2022-01-31. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
- ↑ "पद्म पुरस्कार 2022 : बीएचयू चिकित्सा विज्ञान संस्थान के पूर्व प्रोफेसर डा. कमलाकर त्रिपाठी को पद्मश्री सम्मान". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
- ↑ 3.0 3.1 "Padma Awards 2022: From Radheshyam Khemka to Swami Shivanand... these 6 personalities of Kashi got the Padma Award". News Buzz (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2022-01-26. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
- ↑ 4.0 4.1 "वाराणसी के कमलाकर त्रिपाठी को मिला पद्मश्री सम्मान:अबतक मिले 2 अंतरराष्ट्रीय और 15 नेशनल अवॉर्ड, कोरोना काल में की जनता की सेवा". Dainik Bhaskar. https://www.bhaskar.com/local/uttar-pradesh/varanasi/news/varanasi-interview-with-kamalakar-ram-tripathi-said-my-life-is-incomplete-without-medicine-129339664.html."वाराणसी के कमलाकर त्रिपाठी को मिला पद्मश्री सम्मान:अबतक मिले 2 अंतरराष्ट्रीय और 15 नेशनल अवॉर्ड, कोरोना काल में की जनता की सेवा". Dainik Bhaskar.
- ↑ "Padma Vibhushan for two, Padma Shri for nine in Uttar Pradesh". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 2022-01-26. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
- ↑ "Padma Awards 2022: 25 awardees are from poll-bound states; check full list here". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
- ↑ "Padma Award: काशी के ये डॉक्टर फ्री में करते हैं मरीजों की सेवा,अब मिला पद्मश्री सम्मान". News18 हिंदी (in இந்தி). 2022-01-28. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
- ↑ "पद्म पुरस्कार 2022 : बीएचयू चिकित्सा विज्ञान संस्थान के पूर्व प्रोफेसर डा. कमलाकर त्रिपाठी को पद्मश्री सम्मान". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.